Latest Tamil News (June 2):கொரோனா அப்டேட் , தமிழ்நாடு முதல் உலகம் வரை செய்திகள் உடனுக்குடன்

Today News Tamil - Live Updates:கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

  • News18 Tamil
  • | June 02, 2021, 11:34 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 16 DAYS AGO

    AUTO-REFRESH

    18:26 (IST)

    18:18 (IST)

    இந்தியாவில் டெல்டா என்று அழைக்கப்படும் B.1.617.2 வகை வைரஸ் மட்டுமே கவலைக்குரிய வைரஸ் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸின் உருமாற்றமடைந்த மூன்று வகைகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன. B.1.617 வகை வைரஸானது இந்தியாவில் B.1.617.1 , B.1.617.2. B.1.617.3 என மூன்று வகையாக உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. இவை அனைத்தும் கவலைக்குரிய வைரஸ் வகைகள் என்று கடந்த மாதம் உலக சுகாதர நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில் B.1.617.2 மட்டுமே அபாயகரமான அளவில் உள்ளதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து மற்ற இரண்டு வகைகளை தவிர்த்து விட்டு B.1.617.2 மட்டுமே கவலைக்குரிய வைரஸ் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

    18:16 (IST)

    பட்டா கத்தியுடன் பாட்டுப்பாடி வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலைடத்த போலீசார்

    திருப்பூரில் பட்டா கத்தியுடன் பாட்டுப்பாடி வீடியோ வெளியிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். பெரியதோட்டம் பகுதியை சேர்ந்த பீர்முகமது, ரகுமான் ஆகியோர் பட்டா கத்தியுடன் பாட்டுப்பாடி வீடியோ எடுத்து இன்ஸ்டர்கிராமில் பதிவிட்டனர். இது தொடர்பாக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் சிவராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். இருவரையும் 15 நாட்கள் தாராபுரம் கிளை சிறையில்அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சரியாக கண்காணித்து வளர்க்க வேண்டும் என காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    18:16 (IST)

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

    பாரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச், அமெரிக்காவை சேர்ந்த டெனிஸ் சாண்ட்கிரென் உடன் மோதினார். இந்த போட்டியில் 6 க்கு 2, 6 க்கு 4, 6 க்கு 2 என்ற நேர் செட்களில் சாண்ட்கிரெனை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேறினார். இரண்டாவது சுற்றில் உருகுவே வீரர் பாப்லோ குவாசுடன் ஜோகோவிச் மோத உள்ளார்.

    18:10 (IST)

    சினோவாக் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி

    சீனாவின் சினோவாக் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதியை வழங்கியுள்ளது. ஏற்கனவே சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது சினோவாக் தடுப்பூசியை பயன்படுத்தவும் உலக சுகாதார மையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. 18 வயது மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தலாம் எனவும், முதல் டோஸ் செலுத்திய இரண்டு முதல் நான்கு வார காலத்தில் அடுத்த டோஸ் செலுத்தப்படலாம் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    17:45 (IST)

    தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து

    17:45 (IST)


    பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக பெற்றோர்கள் மாணவர்களின் கருத்துக்களை பெற்று பள்ளிக்கல்வித் துறை ஆணையரகத்திற்கு நாளைக்குள் அனுப்ப வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவு.மாணவர்கள் பெற்றோர்களை நேரில் வரவழைக்காமல் இணைய வழியாக தொடர்பு கொண்டு கருத்துக்களை பெற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது

    17:44 (IST)


    பதவி உயர்வு குறித்த குற்றசாட்டு உள்ள நிலையில், மதுரை காமராஜர் பல்கலையில் சிண்டிகேட் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பேராசிரியர்கள்  சுதா ,  தங்கராஜ்,  நாகரத்தினம் ஆகிய 3 பேரும்   சிண்டிகேட் உறுப்பினராக செயல்பட தடை  விதித்து உயர் நீதிமன்றம்  மதுரை கிளை உத்தரவு