• HOME
  • »
  • NEWS
  • »
  • live-updates
  • »
  • புதுச்சேரியில் பல வியாதிகளால் மரணமடைந்த முதியவருக்கு கொரோனா தொற்று

புதுச்சேரியில் பல வியாதிகளால் மரணமடைந்த முதியவருக்கு கொரோனா தொற்று

கோப்புப் படம்

கோப்புப் படம்

பொதுமக்கள் அலட்சியமாகிவிட்டதால் கொரோனா தொற்று புதுச்சேரியில் அதிகரித்து வருவதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

  • Share this:
விழுப்புரம் மாவட்டம்   குமளம் கிராமத்தை சேர்ந்த முதியவர் செல்வராஜ். 80 வயதான இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உட்பட பல்வேறு நோய் காரணமாக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் இவர் கடந்த 4-ம் தேதி  அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், (நேற்று) 9-ம் தேதி சிகிச்சை பலனின்றி செல்வராஜ் இறந்தார்.  அவரது ரத்த மாதிரியை சோதித்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒருவரின் உடலை அடக்கம் செய்ததில் தவறு நடந்ததை ஒட்டி இம்முறை உரிய வழிகாட்டலுடன், அவரின் உடலை இன்று அடக்கம் செய்ய சுகாதார துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதனிடையே பொதுமக்கள் அலட்சியமாகிவிட்டதால் கொரோனா தொற்று புதுச்சேரியில் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரியில் மேலும்  5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. இதில்  77 பேர் சிகிச்சை பெற்றும் 55 பேர் குணமடைந்தும் வீடு திரும்பியதாக குறிப்பிட்டார்.

பொதுமக்கள் அலட்சியமாகி விட்டதால் புதுச்சேரியில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் தமிழகத்தில் சென்னையில் பாதிப்பு அதிகமாகி வருவதால் புதுச்சேரி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் மல்லாடி கிருஷ்ணாராவ் கேட்டுக்கொண்டார்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்து இறந்தால் அவர்களை ஒரே இடத்தில் மின் தகனம் செய்ய முடிவெடுத்து இறந்தவர்களின் குடும்பத்தினர் அனுமதியுடன் அவர்களின் உடல் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் உரிய மரியாதையுடன் உடலை மின் தகனம் செய்வார்கள். இதற்கான கோப்பு துணைநிலை ஆளுநர் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க...

விளையாட்டு வியாபாரமானது... குவியும் ஆர்டர்கள்...! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: