சென்னையில் நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டல வாரியான விபரங்கள்

கொரோனா நோய்த் தொற்றுக்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் பல மருத்துவ நிபுணர்கள் இறுதி சோதனையில் உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் 64.22 சதவீதம் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர்.

 • Share this:
  சென்னையில் நேற்று ஒரே நாளில் 103 கொரேனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக திருவிக நகரில் 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058-ஆக அதிகரித்துள்ளது. சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 673 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

  தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில், 32.7 சதவீதமாகும்.
  சென்னையில், ஏப்ரல் 19-ஆம் தேதி வரை 78 வார்டுகளில் தான் பாதிப்பு இருந்தது. ஆனால், 19-ஆம் தேதியில் இருந்து சென்னையில் மட்டும் 558 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் 64.22 சதவீதம் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர்.

  சென்னையில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக திருவிக நகரில் 34 நபரும், தேனாம்பேட்டையில் 25 நபரும், அண்ணாநகரில் 12 நபரும், வளசரவாக்கத்தில் 9 நபரும், ராயபுரத்தில் 6 பேரும், தண்டையார்பேட்டையில் 4 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மொத்தமாக ராயபுரத்தில் 164 நபரும், திருவிக நகரில் 128 நபரும், தேனாம்பேட்டையில் 81 நபரும், தண்டையார்பேட்டையில் 70 நபரும், அண்ணா நகரில் 65 நபரும், கோடம்பாக்கத்தில் 60 நபரும் பாதித்து உள்ளனர்.

  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Vijay R
  First published: