ஏழு கெட்டப்புகளில் விக்ரம்: அசத்தும் கோப்ரா ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஏழு கெட்டப்புகளில் விக்ரம்: அசத்தும் கோப்ரா ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்
கோப்ரா
  • Share this:
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

கடாரம் கொண்டான் படத்தை அடுத்து விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தை இமைக்கா நொடிகள் பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக 'கே.ஜி.எப்' புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகி வரும் இந்தப் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிகராக அறிமுகமாகிறார்.பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கோப்ரா படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டரில் 7 கெட்டப்புகளில் விக்ரம் காட்சியளிக்கிறார். ஏழு கெட்டப்புகளும் ஒவ்வொரு ரகமாக இருக்கின்றன. உடைந்த சிதறும் கண்ணாடியைப் பார்த்து உரக்க கத்தும் விக்ரம் ஏழு விதமான கெட்டப்புகளில் காட்சிதருகிறார். சில கெட்டப்புகளில் தமிழ் நிலத்தைக் கடந்த வயது முதிர்ந்த மனிதர்களின் முகசாயலில் அவரது முகம் இருக்கிறது. ஏழு கெட்டப்புகளுடன் வெளியாகியுள்ள ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் கோப்ரா படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Also see:


 
First published: February 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்