புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், சென்னை, விழுப்புரம் மற்றும் கடலூர் பகுதியில் இருந்து வரும் மக்களால் தான் புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகமாகிறது. இதனால் எல்லைகள் இன்னும் கூடுதலாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என்றார்.
மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க கொரோனா முடியும் வரை புதுச்சேரியில் மக்கள் அதிகம் கூடும் சண்டே மார்க்கெட் மற்றும் வார சந்தைகளுக்கு அனுமதி இல்லை என்ற முதல்வர், அரசு கோவிட் மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துமனையில் தினமும் தலா 300 பேருக்கு உமிழ் நீர் பரிசோதனை செய்ய வசதி இருந்தும் 100 க்கும் குறைவாகவே பரிசோதனை நடக்கிறது. இதனை முழுமையாக செய்ய நேரில் சென்று உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் 9000 பதவிகள் காலியாக உள்ளன. கொரோனாவை காரணம் காட்டி தள்ளி போடாமல் முடிந்தவரையில் பதவிகளை நிரப்பிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்த முதல்வர் நாராயணசாமி,
புதுச்சேரியில் கடைகள் மூடும் நேரம் அண்டை மாநிலத்தை போல் குறைக்க அரசு பரிசீலித்து வருவதாகவும் விரைவில் நேரக்கட்டுப்பாடை அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.