• HOME
  • »
  • NEWS
  • »
  • live-updates
  • »
  • மணிப்பூர் கவர்னராக நியமிக்கப்ட்டுள்ள இல.கணேசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மணிப்பூர் கவர்னராக நியமிக்கப்ட்டுள்ள இல.கணேசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

இல.கணேசன்

இல.கணேசன்

நீண்ட அரசியல் அனுபவத்துக்குச் சொந்தக்காரருமான அண்ணன்  இல.கணேசனுக்கு வாழ்த்துகள் என்றுள்ளார்.

  • Share this:
    மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள
    இல. கணேசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரவித்துள்ளார்.

    இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மணிப்பூர் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ள தலைவர் கலைஞரின் அன்பைப் பெற்ற பண்பாளரும்; நீண்ட அரசியல் அனுபவத்துக்குச் சொந்தக்காரருமான அண்ணன்  இல.கணேசனுக்கு வாழ்த்துகள் என்றுள்ளார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் இல.கணேசன் அவர்களுக்கு தனது வாழ்துகளை தெரவித்துள்ளார்.

    Also read : மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பாளரை அறிவித்த திமுக!

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இல.கணசனின் வீட்டில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். எனது அரசியல் ஆசான் இல.கணேசன் ஆளுநராக நியமிக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி. கட்சியின் அமைப்பு செயலாளராக சிறப்பாக செயல்பட்டவர். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மணிப்பூர் பகுதியில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளது அவரின் செயல்திறன்தான் காரணம் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து,  நாடு முழுவதும் தமிழர்கள் பணியாற்றும் வாய்ப்பை பாஜக ஏற்படுத்தி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

    31 ஆண்டுகளாக பாஜக செயற்குழு உறுப்பினராக இருக்கும் இல.கணேசன், இடையில் தேசியச் செயலாளர், தேசிய துணைத் தலைவர், மாநிலத் தலைவர் பதவிகளிலும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநராக உள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: