பிரதமர் மோடி உடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு

பிரதமர் மோடி - முதல்வர் பழனிசாமி

இந்த விழாவில் தமிழில் உரை தொடங்கிய பிரதமர் மோடி வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு என்று பேசினார்.

  • Share this:
    நேரு உள்விளையாட்டு அரங்க நிகழ்ச்சிக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 10 நிமிடங்கள் சந்தித்து ஆலேசானை நடத்தி உள்ளனர்.

    தமிழகத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்க டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் இன்று சென்னை வந்தார் பிரதமர் மோடி. சென்னை வந்த பிரதமர் மோடிக்கு அதிமுக, பாஜக தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். இதை தொடர்ந்து நேரு உள்விளையாட்டு அரங்கு விழா மேடைக்கு வந்த மோடி வண்ணாரபேட்டை - விம்கோ மெட்ரோ ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கியை நாட்டுக்கு அர்ப்பணித்து, பல நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைத்தார்.

    இந்த விழாவில் தமிழில் உரை தொடங்கிய பிரதமர் மோடி வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு என்று பேசினார். தமிழக மீனவர்கள் நலன், தேவேந்திர குல வேளாளர் ஏற்பு உள்ளிட்டவற்றை பேசிய பிரதமர் மோடி அவ்வையார், மகாகவி பாரதியார் ஆகியோரின் பாடல்களையும் மேற்கொள் காட்டினார். இந்த நிகழ்ச்சிக்கு பின் பிரதமர் மோடி உடன் தமிழக முதல்வர் பழனிசாமி சந்தித்து சுமார் 10 நிமிடங்கள் ஆலோசனை நடத்தி உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிப்ரவரி 25-ம் தேதி கோவை வர உள்ள நிலையில் இவர்களது ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    மேலும்  தமிழக ஆளுநர் ,பங்காரு அடிகளார், அப்பல்லோ மருத்துவமனைகள் தலைவர் பிரதாப் ரெட்டி,மகள் பீரித்த ரெட்டி ஆகியோர் மரியாதை நிமித்தமாக  பிரதமர் மோடியை சந்தித்தனர்.
    Published by:Vijay R
    First published: