Home /News /live-updates /

IPL 2022: முதல் முறையாக கிறிஸ் கெய்ல் இல்லாத ஐபிஎல் - காரணம் என்ன?

IPL 2022: முதல் முறையாக கிறிஸ் கெய்ல் இல்லாத ஐபிஎல் - காரணம் என்ன?

கிறிஸ் கெய்ல்

கிறிஸ் கெய்ல்

ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் பங்க்குபெறுமாறு அணி உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டும் தான் பங்குபெறப்போவதில்லை என்று திட்டவட்டமாக மறுத்து விட்டாராம் யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல்.

    ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் பங்க்குபெறுமாறு அணி உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டும் தான் பங்குபெறப்போவதில்லை என்று திட்டவட்டமாக மறுத்து விட்டாராம் யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல்.

    IPL 2009-க்குப் பிறகு முதல் முறையாக, IPL 2022 மெகா ஏலத்தில் நுழைவதற்கு எதிராக கெய்ல் முடிவெடுத்ததால், IPL சீசனில் கிறிஸ் கெய்ல் ஆட மாட்டார். உலகெங்கிலும் உள்ள பல்வேறு லீக்குகளை யுனிவர்ஸ் பாஸ் தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், லீக்கில் பதிவு செய்யாத அவரது முடிவு அவரது ஐபிஎல் வாழ்க்கை இத்தோடு முடிந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்துகிறது.

    ஐபிஎல்லில் கெய்லின் செயல்பாடுகள் கடந்த சில சீசன்களில் குறைந்துவிட்டன, மேலும் அவர் ஒரு உறுதியான தேர்வாக இல்லை. 2018 ஆம் ஆண்டிலும், கெய்ல் இரண்டு முறை விற்பனையாகாமல் போன பிறகுதான் ஒப்பந்தம் போட்டார். பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) உடனான ஒப்பந்தம் முடிந்த பிறகு அவர் லீக்கில் இருந்து விலக முடிவு செய்துள்ள நிலையில், அவரது முன்னாள் ஐபிஎல் உரிமையாளர்கள் இரண்டு பேர் கெய்ல் கட்டாயம் ஏலத்தில் பங்கு பெற வேண்டும் என்று விரும்புவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Cricbuzz செய்திகளிபடி, கெயிலின் முன்னாள் ஐபிஎல் உரிமையாளர்கள் அவரை ஐபிஎல் 2022 ஏலத்தில் சேருமாறு கேட்டிருந்தனர். ஆனால் கெய்ல் மறுத்துள்ளார். அதனால் லீக்கில் பதிவு செய்யவில்லை. ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோரையும் உரிமையாளர்கள் விரும்புவதாக அறிக்கை கூறுகிறது.

    ஸ்டோக்ஸ் நியூசிலாந்திற்கு எதிரான சொந்த தொடருக்கு முன் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுவார், அதே நேரத்தில் ஸ்டார்க் ஐபிஎல் 2022 இன் போது ஓய்வில் இருப்பார்.

    கெய்ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB)-இன் இன்றியமையாத உறுப்பினராக இருந்தார், மேலும் 2014 இல் அவர்களால் தக்கவைக்கப்பட்டார். அவர் 2011 முதல் 2013 வரை பிரமாதமாக ஆடி சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். இந்த காலகட்டத்தில் இரண்டு முறை 700 ரன்களை கடந்தார். ஐபிஎல் 2017க்குப் பிறகு, தக்கவைக்கப்பட்ட பிறகு அவர் ஒரு முறை மட்டுமே 450 ரன்களை கடக்க முடிந்தது.

    அவர் 2018 இல் 2 கோடி ரூபாய்க்கு PBKS இல் சேர்ந்தார் மற்றும் அவர்களுக்காக 4 சீசன்களில் 41 போட்டிகளில் 1339 ரன்கள் எடுத்தார். அவர் ஐபிஎல் 2021 இடைக்கால சீசனில் இருந்து விலகினார். மொத்தம் 142 போட்டிகளில் 4965 ரன்கள் எடுத்துள்ளார் கெய்ல். டி20 லீக்கில் 6 சதங்கள் மற்றும் 31 அரை சதங்கள் அடித்துள்ளார். கெய்ல் தனது கேரியரில் ஐபிஎல் அணிக்கு கேப்டனாக இருந்ததில்லை.

    கெய்லைத் தவிர, ஏபி டி வில்லியர்ஸ் மற்றொரு ஐபிஎல் ஜாம்பவான் ஆவார், அவர் லீக்கில் பங்கேற்க மாட்டார். முன்னாள் RCB விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் நவம்பர் 2021 இல் தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Chris gayle, IPL 2022

    அடுத்த செய்தி