சிதம்பரத்துக்கு முன்ஜாமின் இல்லை! உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்க பரிந்துரை

ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமின் வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதனையடுத்து, உடனடியாக சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மேல்முறையீடு செய்தார்.

சிதம்பரத்துக்கு முன்ஜாமின் இல்லை! உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்க பரிந்துரை
Breaking News
  • News18
  • Last Updated: August 21, 2019, 11:19 AM IST
  • Share this:
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவை தலைமை நீதிபதியின் அமர்வுக்கு நீதிபதி ரமணா மாற்றியுள்ளார்.

மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்த போது, கடந்த 2007-ம் ஆண்டில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் 305 கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றது. இதற்காக நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை முறைகேடாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதில் ஐஎன்எக்ஸ் நிறுவனத்துக்கு சிதம்பரத்தின் மகன் கார்த்தி உதவியதாகவும், அதற்கு ஈடாக லஞ்சம் தரப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமின் வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதனையடுத்து, உடனடியாக சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மேல்முறையீடு செய்தார்.


இன்று காலையில் நீதிபதி ரமணா முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. ப.சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், சல்மான் குர்ஷித், விவேக் தன்கா ஆகியோர் ஆஜராகினர்.

சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், ‘சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையின் கேள்விகளுக்கு எல்லா நேரங்களிலும் பதில் அளித்துள்ளோம். விசாரணை அமைப்பின் அழைப்பாணையை ஏற்று எட்டுமுறை நேரடியாக சென்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம், சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுகளைத் தாண்டி தலைமறைவாக வேண்டிய அவசியம் இல்லை என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சி.பி.ஐ சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில் ப.சிதம்பரம் தரப்பில் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதி ரமணா, ‘இந்த மனு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை. இந்த மனுவை தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை செய்தார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் மேல்முறையீடு செய்த நிலையில், அயோத்தி வழக்கு விசாரணை நடைபெற்றுவருவதால் உடனடியாக அந்த மனுவை விசாரிக்க முடியாது. பிற்பகல் 1 மணிக்கு முன்ஜாமின் கோரி முறையிட வேண்டும் என்று ரஞ்சன் கோகாய் அறிவுரை செய்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்காத நிலையில், சிதம்பரத்தை தடை செய்வதற்கு எந்த தடையும் இல்லாத சூழலே நிலவுகிறது.

Also see:

First published: August 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்