ஹோம் /நியூஸ் /Breaking and Live Updates /

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதியை கொலீஜியம் பரிந்துரைத்தும் மத்திய அரசு இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதியை கொலீஜியம் பரிந்துரைத்தும் மத்திய அரசு இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

சென்னை உயர்நீதிமன்றத்திகு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை நீதிபதி முரளிதர்

சென்னை உயர்நீதிமன்றத்திகு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை நீதிபதி முரளிதர்

முனிஷ்வர்நாத் பண்டாரி ஓய்வு பெற்ற பிறகு எஸ்.முரளிதரை  தலைமை நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரைத்து  இரண்டு மாதங்கள் ஆகியும் மத்திய அரசு எந்த முடிவும் எடுக்காதது குறித்து பல விதமான  கருத்துக்கள் எழுந்து வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதியாக ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.முரளிதரை கொலீஜியம் பரிந்துரைத்தும் இதுவரை மத்திய  அரசு எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது.

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்க பரிந்துரைக்க அமைக்கப்பட்டது தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட மூத்த நீதிபதிகள் அடங்கிய 'கொலீஜியம்' உச்ச நீதிமன்றத்தில் முதல் ஐந்து மூத்த நீதிபதிகளை கொண்ட இந்த குழு தான், உச்ச நீதிமன்றத்துக்கும்,  உயர் நீதிமன்றங்களுக்கும் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளை மத்திய அரசுக்கு பரிந்துரைக்கும்.

இந்த பரிந்துரை மீது மத்திய அரசு முடிவெடுத்து அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி அவரது ஒப்புதல் பெற்று நியமன உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர்நாத் பண்டாரி, கடந்த  செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, ஒடிசா தலைமை நீதிபதியாக உள்ள எஸ்.முரளிதரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற  கொலிஜியம் பரிந்துரைத்தது.

இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், இதுவரை இந்த பரிந்துரை மீது மத்திய அரசு எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள டி.ராஜாவை, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலிஜியம் , மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

இந்த பரிந்துரை ஏற்கப்பட்டு, நீதிபதி ராஜா ராஜஸ்தானுக்கு மாற்றப்படும் பட்சத்தில், அவருக்குப் பிறகு மூத்த நீதிபதியாக உள்ள நீதிபதி பரேஷ் உபாத்யாய், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:  இன்னும் 2 நாட்கள்.. 7 மாவட்டங்களை குறி வைத்த கனமழை.. வானிலை மையத்தின் அலெர்ட்!

முனிஷ்வர்நாத் பண்டாரி ஓய்வு பெற்ற பிறகு எஸ்.முரளிதரை  தலைமை நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரைத்து  இரண்டு மாதங்கள் ஆகியும் மத்திய அரசு எந்த முடிவும் எடுக்காதது குறித்து பல விதமான  கருத்துக்கள் எழுந்து வருகிறது. பொதுவாக நீதிமன்றங்ளில் வரும் வழக்குகளில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள் பிறப்பிக்கும் உத்தரவுகள், மத்திய - மாநில அரசுகளை கட்டுப்படுத்தும்.   ஆனால், இதே நீதிபதிகள்  கொண்ட கொலீஜியம் அளிக்கும்  பரிந்துரைகள் எந்த விதத்திலும், மத்திய அரசை கட்டுப்படுத்தாது என்பதுடன், அதன் மீது  முடிவெடுக்க வேண்டும் என்ற கட்டாயமும்  மத்திய அரசுக்கு கிடையாது.

நீதிபதிகள் நியமனம் தொடர்பான பரிந்துரைகள்,  நிர்வாக ரீதியானது   (administrative recommendation)  தானே தவிர , நீதித்துறை உத்தரவு (judicial order) அல்ல. இதன் காரணமாகவே எஸ்.முரளிதரனை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கொலீஜியம்  பரிந்துரைத்தும் அது குறித்து மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் உள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

கொலிஜியம் பரிந்துரைத்தும் நீதிபதிகளாக நியமிக்கப்படாதவர்கள் இது தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு தொடர சட்டத்தில் இடம் உள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த சத்தியநாராயணன் பெயரை கொலீஜியம் பரிந்துரைத்தும் மத்திய அரசு முடிவெடுக்காமல் இருந்தபோது சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்த பின்னர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பது இதற்கு உதாரணம்.

இதே போல கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கான  நீதிபதியை 'கொலீஜியம்' பரிந்துரைத்தும் அதன் மீது மத்திய அரசு நீண்ட நாட்களாக முடிவு எடுக்கப்படாததை எதிர்த்து  தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு  அதிருப்தியை தெரிவித்திருந்தது.

அதேபோல வழக்கறிஞர்களை நீதிபதிகளாக கொலீஜியம் பரிந்துரைத்த பிறகும் மத்திய அரசு முடிவு எடுக்காததால் பலருக்கு நீதிபதிகளாகும் வாய்ப்புகள் பறிபோன வரலாறும் உள்ளது.

Published by:Arunkumar A
First published:

Tags: Chennai, Chennai High court, Judge, Supreme court