செங்கல்பட்டு சுங்கச்சாவடி தாக்குதல் : ரூ.18 லட்சம் பணத்தை எடுத்து சென்ற சிசிசடிவி காட்சிகள் வெளியானது..!

செங்கல்பட்டு சுங்கச்சாவடி தாக்குதல் : ரூ.18 லட்சம் பணத்தை எடுத்து சென்ற சிசிசடிவி காட்சிகள் வெளியானது..!
சிசிடிவி காட்சிகள்
  • Share this:
செங்கல்பட்டு சுங்கச்சாவடி தாக்குதல் சம்பவத்தின் போது 18 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

அரசு பேருந்துக்கு சுங்கக்கட்டணம் வசூல் தொடர்பான பிரச்சனையில், செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி கடந்த 25-ஆம் தேதி தாக்குதலுக்கு உள்ளானது. சுங்கச்சாவடி ஊழியர்கள், அரசு பேருந்து நடத்துனர், ஓட்டுநர் மற்றும் பயணிகள் உடனான மோதலில் சுங்கச்சாவடி முழுவதும் சேதமானது.

கணினி உள்ளிட்ட இதர உபகரணங்கள் சேதமானதால் இந்த சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்கள் மூன்றாவது நாளாக கட்டணங்கள் இன்றி பயணம் செய்து வருகின்றன. இந்நிலையில், இந்த விவகாரத்தில் 12 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.இதில் அரசு பேருந்து ஓட்டுநர் நாராயணன், நடத்துனர் பசும்பொன் முடியரசன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு பயிற்சி பணிமனை மேலாளார் இளங்கோ அளித்த புகாரின் பேரில் 3 சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், தாக்குதல் சம்பவத்தின் போது சுங்கசாவடியில் இருந்து 18 லட்சம் ரூபாய் காணாமல் போனதாக சிசிடிவி ஆதாரங்களுடன் சுங்கச்சாவடி மேலாளர் செங்கல்பட்டு தாலுக்கா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இந்த புகாரின் அடிப்படையில் சுங்கச்சாவடியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அப்போது காக்கி சட்டை அணிந்த ஒருவர் பணத்தை எடுத்தும் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

First published: January 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்