சந்திரயான் 2 - விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிப்பு

சந்திரயான் 2 - விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிப்பு
விக்ரம், லேண்டர்
  • News18
  • Last Updated: September 8, 2019, 2:16 PM IST
  • Share this:
நிலவைச் சுற்றி வரும் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நிலவைச் சுற்றி வந்து ஆய்வு செய்த சந்திரயான்-1 திட்டத்தைத் தொடர்ந்து, 978 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சந்திரயான் - 2 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கியது. கடந்த ஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் என்ற மூன்று அமைப்புகளைக் கொண்டது.

கடந்த மாதம் 20-ம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்த சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து கடந்த இரண்டாம் தேதி பிரக்யான் ரோவருடன் கூடிய விக்ரம் லேண்டர் தனியாக பிரிக்கப்பட்டது.


இதையடுத்து செப்டம்பர் 7-ம் தேதி அதிகாலையில் விக்ரம் லேண்டர், நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க திட்டமிடப்பட்டது. எரிபொருள் உள்பட 1471 கிலோ எடையுள்ள விக்ரம் லேண்டருக்குள் பிரக்யான் ரோவர் இருந்தது. இந்திய நேரப்படி அதிகாலை 1.40 மணியளவில் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்க ஆயத்தமானது.

கடைசி நிமிடத்தில் 2.1 கிலோமீட்டர் தொலைவில் லேண்டர் தனது தகவல் தொடர்பை இழந்ததால் நாடே சோகத்தில் ஆழ்ந்தது.

இந்நிலையில் தற்போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் தகவல் தொடர்பு இன்னும் கிடைக்கவில்லை என்றும், லேண்டருடன் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.நிலவைச் சுற்றி வரும் ஆர்பிட்டர் அனுப்பிய புகைப்படத்தின் மூலம் விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது.

 

வீடியோ பார்க்க: நாசாவிற்கு செல்லும் மதுரை டீக்கடைக்காரரின் மகள்!

First published: September 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்