31,400 கோடி ரூபாய் மதிப்பிலான 11 மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர
மோடி இன்று
சென்னை வருகிறார்.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல்லில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு. சி.வி.சண்முகம், ஆர். தர்மர் ஆகியோர் போட்டியிடுவதாக கட்சி தலைமை அறிவிப்பு.
பால் கொள்முதல் விலையை உயர்த்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக கூறி, நூற்றுக்கும் மேற்பட்டோர் அண்ணா சாலையில் இரவில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 45-வது கோடை விழா மலர் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது.
கொடைக்கானல் மலையில் இரண்டாவது நாள் கோடை விழா களைகட்டியது. கயிறு இழுப்பது, மண் பானை உடைப்பது போன்ற போட்டிகளில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
கடலூர் அருகே வளர்ப்பு நாய்-க்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 21 கோடியே 46 லட்ச ரூபாய் மதிப்பிலான நிலத்தை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
சமையல் எண்ணெய், கோதுமையை தொடர்ந்து சர்க்கரை ஏற்றுமதிக்கும் மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்தியா சார்பில் விண்வெளிக்கு ஆய்வாளர்களை அனுப்பும் திட்டம் அடுத்தாண்டு தொடங்கப்படும் என்று அமைச்சர் ஜித்தேந்தர சிங் தெரிவித்துள்ளார்.
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் ஆகிய இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் இம்ரான் கான் கட்சியினரின் பேரணியில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து தலைநகர் இஸ்லாமாபாத்தில் ராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியதாக எழுந்த குற்றச்சாட்டில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னனியின் தலைவர் யாசின் மாலிக்-கிற்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தமிழில் ஒன்றியம் என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளதாக கமல் விளக்கம். விக்ரம் திரைப்பட முதல் பாடலுக்கு சர்ச்சை எழுந்த நிலையில் கருத்து.
நடிகர் தனுஷ் தங்களது மகன் என்பதிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை என மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த கதிரேசன் தம்பதியினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பிரெஞ்சு ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் குரோஷியா இவான் டோடிக் ஜோடி, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
Must Read : பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வருகிறார் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்புச் சாம்பியனும், உலகின் நம்பர் ஒன் வீரருமான செர்பியாவின் ஜோகோவிச், மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
கோவில்பட்டியில் நடைபெறும் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு ஒடிசா, ஹரியானா அணிகள் தகுதி பெற்றுள்ளன.
செஸபிள் மாஸ்டர் தொடர் இறுதி ஆட்டத்தின் முதல் சுற்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா பின்னடைவை சந்தித்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வெளியேற்றுதல் சுற்றில், லக்னோ அணிக்கு எதிராக பெங்களூரு அணி போராடி வெற்றிபெற்றது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.