முகப்பு /செய்தி /Live Updates / Exclusive: ஜம்மு- காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து: ஜூன் 24ல் பிரதமர் மோடி ஆலோசனை!

Exclusive: ஜம்மு- காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து: ஜூன் 24ல் பிரதமர் மோடி ஆலோசனை!

கோப்புப் படம்

கோப்புப் படம்

காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும் முடிவை அறிவிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வரும் அதேவேளையில், எல்லை குறித்து அமைக்கப்பட்டுள்ள கமிட்டி அதன் முடிவை தாக்கல் செய்யும் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக வரும் 24ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப் பிரிவை கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும் ஜம்மு-காஷ்மீர் , லடாக் ஆகியவற்றை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு மறுசீரமைப்பு செய்தது.  மத்திய அரசின் இந்த  நடவடிக்கை நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

மத்திய அரசின் இந்த  அறிவிப்புக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த தலைவர்கள் கடும்  எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து பலரும் கைது செய்யப்பட்டனர், சிலர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். இணைய சேவை ரத்து உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் மாபெரும் திருப்பமாக, ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் முன்பே அறிவித்தப்படி விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படலாம் என்றும் அதேவேளையில் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக வரும் 24ம் தேதி, ஜம்மு- காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை  நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மத்திய அரசு மற்றும் காஷ்மீர் பள்ளாத்தாக்கு தலைவர்களுக்கு இடையேயான நேரடி பேச்சுவார்த்தையின் தொடக்கமாக இது பார்க்கப்படுகிறது.  காஷ்மீரைச் சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய  மாநாட்டு கட்சி, பாரதிய ஜனதா கட்சி,காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த சந்திப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இந்த சந்திப்பின்போது, காஷ்மீரில் அரசியல் செயல்முறையை தொடங்குவதற்கு தொடர்பாக பிரதமர் விவாதிப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும் முடிவை அறிவிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வரும் அதேவேளையில், எல்லை குறித்து அமைக்கப்பட்டுள்ள கமிட்டி அதன் முடிவை தாக்கல் செய்யும் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதேவேளையில், மற்றொரு யூனியன் பிரதேசமான லடாக்கின் நிலையில் தற்போது எந்த மாற்றும் இருக்காது என்றும் கூறப்படுகிறது. தேசிய பாதுகாப்பு முகவர் அஜித் தோவலின்  பல மாத மூலோபாயத்திற்கு பிறகு இந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் தீவிர முனைப்பு காட்டிய அஜித் தோவல்,  ஒருமித்த முடிவு எட்டப்படுவதற்காக காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகளுடனும் பேச்சு நடத்தினர்.

காஷ்மீர் தலைவர்களுடனான சந்திப்பின்போது, அங்கு தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பாகவும் மோடி உத்தரவாதம் அளிப்பார் என கூறப்படுகிறது. எல்லை வரையறை முடிந்தபின்னர் தேர்தல் பணிகள் தொடங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  எல்லை மறுவரையறைக்கு பின்னரும் காஷ்மீரின் நிலப்பரப்பில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்றே கூறப்படுகிறது.

First published:

Tags: Central government, Jammu and Kashmir