ஹோம் /நியூஸ் /Breaking and Live Updates /

செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கூடாது - நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம்

செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கூடாது - நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம்

அமைச்சர் செந்தில்பாலாஜி

அமைச்சர் செந்தில்பாலாஜி

Madras High Court | அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011-15ம் ஆண்டுகளில் பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள்  புகார் அளித்தனர்..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கூடாது என அமலாக்கத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையில்  வேலை வாங்கி வருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள்  புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மூன்று வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்குகள் சென்னை எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இதையும் படிங்க : சாந்தி தியேட்டர் சொத்துகள் பிரச்னை... சிவாஜி மகள்கள் தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி

இந்நிலையில், தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே தன் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்க துறை தரப்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, வேலைக்காக கொடுத்த இரண்டரை லட்சம் ரூபாயை கொடுத்து ஏமாந்தவர்கள், தற்போது அந்த வழக்கையே திரும்பப்பெற  லட்சக்கணக்கான ரூபாயை செலவழித்து இந்த வழக்கை நடத்துவது ஆச்சரியமளிப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க : ரூ.42 கட்டினால் போதும்.. மாதம் ரூ.1000 கிடைக்கும்.. மத்திய அரசு திட்டம் குறித்து பேசிய அண்ணாமலை!

மேலும், தற்போதைய தமிழக அரசில்  அதிகாரமிக்க நபராக உள்ள செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டு தான் வழக்குப்பதிவு செய்துள்ளதால், வழக்கை ரத்து செய்யக்கூடாது என  வாதிட்டார். இரு தரப்பு வாதங்கள் நிறைவடையாததால் வழக்கின் விசாரணையை அக்டோபர் 28ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

Published by:Karthi K
First published:

Tags: Chennai, Madras High court, Minister, Senthil Balaji