Britney Spears | 13 வருட கட்டுப்பாடு: சுதந்திர வாழ்க்கை வேண்டி பிரிட்னி ஸ்பியர்ஸ் உருக்கம்

பிரிட்னி ஸ்பியர்ஸ்

தனது பொருளாதாரம் சார்ந்த, வாழ்க்கை சார்ந்த எந்தவொரு முடிவையும் எடுக்கும் உரிமை பிரிட்னி ஸ்பியர்ஸுக்கு மறுக்கப்பட்டது.  கடந்த 13 ஆண்டுகளாகவே தனது வாழ்க்கை குறித்த எந்த முடிவையும் சுயமாக எடுக்க உரிமை இல்லாதவராக பிரிட்னி ஸ்பியர்ஸ் உள்ளார்.

  • Share this:
கடந்த 13 வருடங்களுக்கும் மேலாக தான் அனுபவித்து வரும் கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் நீதிமன்றத்தில் உருக்கமாக பேசியுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல பாப் இசை பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ், பாடகி, பாடலாசியர், நடிகை என பன்முகத் தன்மை கொண்ட இவர் தனது பதின்பருவத்திலேயே பாப் இசையில் மிக பிரபலமாக அறியப்பட்டார். அவரது பாப் இசை ஆல்பங்கள் வசூலில் சக்கைப்போடு போட்டன. இதையடுத்து பாப் இசையின் இளவரசி என பிரிட்னி ஸ்பியர்ஸ் அழைக்கப்பட்டார்.

எந்த அளவுக்கு புகழின் உச்சக்கு சென்றாரோ அதே அளவு சர்ச்சைகளிலும் சிக்கியவர் பிரிட்னி ஸ்பியர்ஸ். கடந்த 2004ம் ஆண்டு ஜனவரிமாதம்  தனது நீண்டகால நண்பரான  ஜேசன் ஆலன் அலெக்சாண்டரை பிரிட்னி ஸ்பியர்ஸ் திருமணம் செய்தார். எனினும், இந்த திருமணம் செல்லாது என அடுத்த 55 மணி நேரத்தில் நீதிமன்றம் அறிவித்தது. தனது செயல் குறித்த புரிதல் பிரிட்னி ஸ்பியர்ஸுக்கு இல்லை என நீதிமன்றம் தெரிவித்தது.

சில மாதங்களில் கெவின் ஃபெடர்லைன் என்பவரை அவர் மணந்தார். இந்த தம்பதியினரும் 2007ம் ஆண்டு விவகாரத்து பெற்று பிரிந்தனர். தனது குழந்தைகளை பராமறிக்கும் உரிமையும் பிரிட்னி ஸ்பியர்ஸுக்கு வழங்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து அவர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளானார். தனது முடியை தானே மொட்டையடித்துக்கொண்டது, பத்திரிக்கையாளர் காரை குடை மூலம் தாக்கியது என கடும் சர்ச்சைகளில் சிக்கினார். இதற்காக மனநலம் மையத்தில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பான வழக்கின் கடந்த 2008ம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்  தந்தை ஜேமி ஸ்பியர்ஸ் மற்றும் வழக்கறிஞர் ஆண்ட்ரூ  வாலட் ஆகியோரின் கட்டுப்பாட்டில் பிரிட்னி ஸ்பியர்ஸ் இருக்க வேண்டும் என உத்தரவிட்டது.

தனது பொருளாதாரம் சார்ந்த, வாழ்க்கை சார்ந்த எந்தவொரு முடிவையும் எடுக்கும் உரிமை பிரிட்னி ஸ்பியர்ஸுக்கு மறுக்கப்பட்டது.  கடந்த 13 ஆண்டுகளாகவே தனது வாழ்க்கை குறித்த எந்த முடிவையும் சுயமாக எடுக்க உரிமை இல்லாதவராக பிரிட்னி ஸ்பியர்ஸ் உள்ளார். பிரிட்னி ஸ்பியர்ஸுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடுகளை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை சமீப காலமாக வலுபெற்றுள்ளன. ட்விட்டரில் பலரும் #FreeBritney என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக லாஸ் ஏஞ்சலில் நீதிமன்றத்தில் பிரிட்னி ஸ்பியர்ஸ் நேரில் ஆஜரானார் அப்போது, 13 ஆண்டுகளாக தனது வாழ்க்கையை நிர்வகிக்கும் "தவறான" பழமைவாதத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.  தனது வாழ்க்கை தனக்கு திரும்ப வேண்டும் எனவும் அவர் உருக்கமாக பேசினார்.  இந்த கட்டுப்பாடுகள் தனக்கு நன்மையை விட தீமையையே அதிகம் அளிப்பதாகவும், தான் ஒரு வாழ்க்கையை வாழ தகுதியானவள் என்றும் அவர் கூறினார்.

தனது விருப்பத்துக்கு மாறாக வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்றுள்ள விரும்புவதாகவும் ஆனால் இந்த கட்டுப்பாடுகள் அதற்கு தடையாக உள்ளதாகவும் பிரிட்னி ஸ்பியர்ஸ் கூறியுள்ளார்.
Published by:Murugesh M
First published: