Tamil News Live: உலகக்கோப்பை கால்பந்து : ஜப்பானிடம் ஜெர்மனி அதிர்ச்சி தோல்வி

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | November 23, 2022, 20:38 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 15 DAYS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    20:37 (IST)

    உலகக்கோப்பை கால்பந்து : ஜப்பானிடம் ஜெர்மனி அதிர்ச்சி தோல்வி

    உலகக்கோப்பை கால்பந்து  லீக் ஆட்டத்தில் ஜெர்மனி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஜெர்மனி - ஜப்பான் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஜப்பான் 1-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி அணி ஜப்பானிடம் தோல்வியடைந்தது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    17:57 (IST)

    குட்கா வழக்கு : விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல

    குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வருமான வரித்துறை அறிக்கையை தொடர்ந்து விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    16:58 (IST)

    நடிகர் விஜய்க்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பு


    நடிகர் விஜய்க்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர். பனையூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர் விஜய் வந்த போது அவரது காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியதால் மோட்டர் வாகன சட்டத்தின் கீழ் அவருக்கு ரூ.1000 அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

    16:13 (IST)

    10 சதவீத இடஓதுக்கீடு : காங்கிரஸ் சீராய்வு மனு

    உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஓதுக்கீட்டு தீர்ப்பை எதிர்த்து மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்கூர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

    15:18 (IST)

    சென்னை மின்சார ரயில் சேவை பாதிப்பு


    சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் துண்டித்து புறநகர் ரயில் பாதிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் சானிடோரியம் ரயில் நிலையம் அருகே ரயில் வந்த போது மின் வயர் துண்டிப்பு ஏற்பட்டுள்து. ரயில் பாதி வழியில் நின்றதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். 

    14:36 (IST)

    திமுக இளைஞரணி செயலாளராக நியமனம் செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் திமுக தலைவர் மு க ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.

    13:37 (IST)

    நாங்கள் கொடுத்துள்ள கோரிக்கை மனுக்களை படித்து பார்த்து விசாரிப்பதாகவும் ஆளுநர் கூறியுள்ளார்; தமிழகத்தில் ஆளுநரின் செயல்பாடு நன்றாக உள்ளது  - எடப்பாடி பழனிசாமி

    13:36 (IST)

    ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து ஆளுநரிடம் பேசினோம், ஆளுநர் பரிசளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம் - எடப்பாடி பழனிசாமி

    13:16 (IST)

    15 கால திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது - எடப்பாடி பழனிசாமி

    13:16 (IST)

    தமிழகத்தில் நடைபெற்று வரும் மோசமான சம்பவங்களை ஆளுநரிடம் பட்டியலிட்டு குறிப்பிட்டுள்ளோம் - எடப்பாடி பழனிசாமி