தீபத்திருவிழா : பாதுகாப்பு பணியில் 12,500 காவலர்கள்
தீபத்திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் பலர் கிரிவலம் வருகின்றனர். இதையொட்டி கிரிவல பாதையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தீபத்திருவிழாவுக்காக திருவண்ணாமலைக்கு 2,300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை, தாம்பரம், மதுரையிலிருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் 12 ஆயிரத்து 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை மலைக்கு எடுத்துச் செல்ல தடை
தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் மலை ஏறுவதற்கு டோக்கன் பெற்ற 2 ஆயிரத்து 500 பேர் பே கோபுரம் வழியாக மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பகல் 2 மணி வரை மலை ஏறலாம். அதே நேரம் பக்தர்கள் கற்பூரம் உள்ளிட்ட எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை மலைக்கு எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.!
முதலில் வந்த 2,500 பேர் டோக்கன் பெற்றனர்
தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் மலை ஏறுவதற்கு நீதிமன்ற உத்தரவுப்படி 2,500 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக செங்கம் சாலையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் காலை 6 மணி முதல் அனுமதி சீட்டு வழங்கப்பட்டது. முதலில் வந்த 2 ஆயிரத்து 500 பேர் அடையாள அட்டைகளை காட்டி டோக்கன் பெற்றனர். அவர்கள் பே கோபுரம் வழியாக மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
முதலில் வரும் 2500 பேருக்கு மட்டுமே மலையேற அனுமதி
திருவாண்ணாமலை மகா தீபத்தில் பங்கேற்க, பக்தர்கள் உற்சாகத்துடன் மலையேறத் தொடங்கினர். மகாதீபத்தை ஒட்டி மலையேறுவதற்கு 2500 பக்தர்களுக்கு மட்டும் அனுமதி தரப்பட உள்ளது. முதலில் வரும் 2500 பேருக்கு அரசுக்கலை கல்லூரியில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை தரப்படுகிறது.