Tamil News Live : இந்தியர்கள் உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுங்கள்! - இந்திய தூதரகம் அறிவிப்பு

Breaking News, Today (October 19 Wednesday). இன்றைய முக்கியச் செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | October 19, 2022, 21:30 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A MONTH AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    21:19 (IST)

    இந்தியர்கள் உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுங்கள்! 

    இந்தியர்கள் யாரும் உக்ரைனுக்கு செல்ல வேண்டாம். உக்ரைனில் இருக்கும் மாணவர்கள் உட்பட அனைத்து இந்தியர்களும் உடனடியாக உக்ரைனில் இருந்து வெளியேறுங்கள்.

    - இந்திய தூதரகம் அறிவிப்பு

    20:43 (IST)

    அக்டோபர் 27ம் திமுக அரசை கண்டித்து பாஜக போராட்டம்!

    அக்டோபர் 27ஆம் தேதி திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

    .

    18:0 (IST)

    மல்லிகார்ஜுன கார்கேவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

    காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மல்லிகார்ஜுன கார்கேவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். 

    17:15 (IST)

    திமுக அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை ஓய மாட்டோம் - தொண்டர்கள் மத்தியில் ஈபிஎஸ் பேச்சு

    சபாநாயகர் நடவடிக்கையை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி உண்ணாவிரத  போராட்டம் நடத்திய அதிமுகவினர் கைது செய்யப்பட்டு ராஜத்தினம் மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அதிமுகவினர் போராட்டத்தை முடித்துக்கொண்டனர். அப்போது பேசிய இபிஎஸ் திமுக அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை ஓய மாட்டோம் என பேசினார்.

    16:25 (IST)

    காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கேவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!

    “இந்தியாவின் பழமைவாய்ந்த கட்சிக்கு தலைமை ஏற்றுள்ளார் கார்கே. இந்தியாவின் மதச்சார்பின்மையையும் பன்முகத்தன்மையையும் காப்பாற்ற வேண்டிய இந்த முக்கிய தருணத்தில் பதவியேற்றுள்ளார். இந்த பதவியில் அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    15:24 (IST)

    ஜெ. மரணம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    “ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து மருத்துவத்துறை செயலாளருக்கு தலைமை செயலாளர் கோப்புகளை அனுப்பியுள்ளார்.

    சட்ட வல்லுநர்களுடன் பேசி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து துறை செயலாளர் முடிவு செய்வார்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    13:30 (IST)

    காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் மல்லிகார்ஜுனா கார்கே

    காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் கார்கே 7000 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஷஷி தரூர் 1600 வாக்குகளை பெற்றுள்ளார். 


    13:22 (IST)

    12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, நீலகிரி, கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

    13:18 (IST)

    யார் யார் குற்றவாளிகளோ, அவர்கள் நிச்சயமாக கூண்டில் ஏற்றப்படுவார்கள், தண்டிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு 

    13:18 (IST)

    யார் யார் குற்றவாளிகளோ, அவர்கள் நிச்சயமாக கூண்டில் ஏற்றப்படுவார்கள், தண்டிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு