Tamil News Live : கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

Breaking News, Today (October 18). இன்றைய முக்கியச் செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | October 18, 2022, 19:39 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A MONTH AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    19:23 (IST)

    கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

    உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த மூவர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். மேலும் அவர்களின் உடலை தமிழ்நாடு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    18:1 (IST)

    ஜெயலலிதா ரத்த வெள்ளத்தில் மூழ்கியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன் - அப்போதைய தலைமை செயலாளர்

    “மறைந்த முதல்வருக்கு திறந்த இதய அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு, இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்ததாக அப்போதைய தலைமை செயலாளர் ராம மோகன ராவ் கூறினார். மேலும் இது ஏன் வார்டில் செய்யப்படுகிறது, அறுவை சிகிச்சை அரங்கிற்கு அழைத்து செல்லலாம் என கூறியதாக தெரிவித்தார்” - ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் தகவல்

    17:37 (IST)

    சசிகலாவின் கருவியாக செயல்பட்டார் விஜயபாஸ்கர்!

    “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை இறுதிநாள் வரை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்து செல்வதற்கான முயற்சிகளை முறியடித்து அப்பல்லோ மருத்துவமனையிலேயே வைப்பதற்காக சசிகலாவின் கருவியாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செயல்பட்டார். மேலும் ஆஞ்சியோ சிகிச்சையை தவிர்த்ததும் விஜய பாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோரால் நன்கு திட்டமிடப்பட்டது” - ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை

    17:14 (IST)

    துப்பாக்கி சூடு விவகாரத்தில் ஈபிஎஸ் சொன்னது தவறு - அருணா ஜெகதீசன் ஆணையம்

    துப்பாக்கிச் சூட்டை ஊடகங்களில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என எடப்பாடி பழனிசாமி கூறியது தவறு. அப்போதைய தலைமை செயலர் கிரிஜா,  டிஜிபி , IG Intelligence ஆகியோர் போராட்ட நிலவரங்கள் குறித்து அனைத்து விபரங்களையும் எடப்பாடி பழனிசாமிக்கு நிமிடத்திற்கு நிமிடம் தகவல் தெரிவித்தனர் - அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை.

    16:58 (IST)

    ரஜினிகாந்த் பொறுப்பாக நடந்துக்கொள்ள வேண்டும் - அருணா ஜெகதீசன் ஆணையம் அறிவுரை!

    “சமூக விரோதிகளால் தான் கலவரம் உண்டானது என தான் கூறியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என ரஜினி பதிலளித்தார். ரஜினிகாந்த போன்ற பிரபலம் ஒரு கருத்தைத் தெரிவிக்கும்போது அவர் கூறும் தகவலின் ஆதாரத்தை உறுதி செய்திருக்க வேண்டும். பிரபலங்கள் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும்” - அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் தகவல்

    14:39 (IST)

    ஜெயலலிதா மரண வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் - ஜெ. தீபா

    “ஜெயலலிதா பழச்சாறு அருந்தும் வீடியோ பழைய வீடியோவாக இருக்கலாம். அதனை காவல்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். எனது அத்தை ஜெயலலிதாவை சந்திக்க பலமுறை முயற்சி செய்தேன். ஆனால் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஜெயலலிதா மரண வழக்கை தேவைப்பட்டால் சிபிஐக்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டும்” - ஜெ.தீபா

    13:36 (IST)

    நாளை காலை 10மணிக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உண்ணாவிரத போராட்டம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறுகிறது


    13:35 (IST)

    இன்றைய பேரவை நிகழ்ச்சிகள் நிறைவடைந்தது.

    நாளை காலை மீண்டும் 10:00 மணிக்கு அவை கூடும்

    13:27 (IST)

    கேதர்நாத்தில் யாத்திரீகர்களுடன் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதால் 6 பேர் உயிரிழந்தனர். 

    13:26 (IST)

    இந்திக்கு எதிரான தீர்மானம்: ஒருமனதாக நிறைவேற்றம்!

    இந்தி திணிப்பிற்கு எதிராக, முதலமைச்சர் கொண்டுவந்த இந்தி எதிர்ப்பு தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தை எதிர்த்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் வெளிநடப்பு செய்த நிலையில் அதிமுக சார்பாக ஓபிஎஸ் ஆதரவு தெரிவித்தார்.