Breaking News : பள்ளி மாற்றுச் சான்றிதழ்களில் தாய் மொழி குறிப்பு- சீமான் வரவேற்பு

இன்றைய முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழுடன் உடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | May 26, 2022, 15:48 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A MONTH AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    20:11 (IST)

    பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி சென்னையில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    19:1 (IST)

    நான் மாணவனாக இருந்தபோது, பள்ளிக்கு செல்ல கோபாலபரத்தில் இருந்து நடந்து வந்து ஸ்டெல்லா மேரிஸ் பேருந்து நிலையத்தில் இருந்து 29c பேருந்தில் செல்வேன். எனவே என் வாழ்வில் இந்த கல்லூரி மறக்க முடியாக கல்லூரி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    17:48 (IST)


    பா.ஜ.க நிர்வாகி பாலச்சந்தரை கொலை செய்த உண்மைக் குற்றவாளிகளை காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். பாலச்சந்தர் குடும்பத்துக்கு பா.ஜ.க அரணாக இருக்கும் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    17:20 (IST)

    நாம் தமிழர் கட்சியின் கோரிக்கை ஏற்று அரசுப் பள்ளி மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ்களில் தாய் மொழி சேர்க்கப்பட்டுள்ளதற்கு நன்றி என்று சீமான் தெரிவித்துள்ளார்.

    17:7 (IST)


    உயர் மருத்துவம் பெறுவதற்காக அமெரிக்காவுக்குச் சென்றுள்ள டி.ராஜேந்தர் விரைந்து நலம் பெற விரும்புகிறேன் என்று சீமான் தெரித்துள்ளார்.

    16:54 (IST)

    ராமேசுவரம் அருகே உள்ள வடகாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த தங்கை சந்திராவை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வடமாநிலக் கயவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

    15:48 (IST)

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையத்தில்  தடை செய்யப்பட்ட போதை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட கடைக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் அவசர தடை  ஆணை உத்தரவு பிறப்பித்து சீல் வைத்துள்ளார்.

    15:9 (IST)

    இராமேஸ்வரம் அருகே பெண்ணை கூட்டு வன்புணர்வு செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

    14:53 (IST)


    தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனின் தாயார் தங்கமணியம்மாள் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 89. 

    13:53 (IST)


    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கீழபூசாரிப்பட்டியில் உள்ள பாப்பான் குளத்தில் குளித்த, 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு.