Tamil News Live : 75 டிஜிட்டல் வங்கிக் கிளைகள் : பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்

இன்று அக்டோபர் 16 (ஞாயிற்றுக்கிழமை) ஆம் நாள். இன்றைய முக்கியச் செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | October 16, 2022, 11:42 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 2 MONTHS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    11:32 (IST)

    75 டிஜிட்டல் வங்கிக் கிளைகள் : பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்

    2022-23-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் உரையில் நாட்டின் 75 வது  ஆண்டு சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் நாடு முழுவதும் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்ட வங்கி கிளைகள் அமைக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார். அதன்படி 75 டிஜிட்டல் வங்கி கிளைகளை பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

    10:47 (IST)

    சிதம்பரம் தீட்சிதர்கள் சிறையில் அடைப்பு : 28ஆம் தேதி வரை காவல்!! 


    குழந்தை திருமண விவகாரத்தில் சிதம்பரம் தீட்சிதர்கள் இருவர் சிறையில் அடைக்கப்பட்டனர். 28ஆம் தேதி வரை அவர்களை காவலில் வைக்க சிதம்பரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    9:52 (IST)

    மாணவி சத்யா கொலை வழக்கு : விசாரணை அதிகாரி நியமனம்!

    சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட வழக்கில் டி.எஸ்.பி செல்வகுமார் தலைமையில் விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் ரம்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    9:26 (IST)

    பேருந்தில் இருந்து கைக்குழந்தையுடன் பெண் கீழே விழுந்த விவகாரம் : ஓட்டுனர் மீது வழக்கு பதிவு

    நேற்று முன்தினம் பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி அதிவேகத்தில் வந்த தனியார் பேருந்தில் திடீரென பிரேக் பிடித்ததால், பேருந்தின் பின்புற இருக்கையில் அமர்ந்திருந்த இளம்பெண் குழந்தையுடன் கீழே தலைகுப்புற விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பேருந்து ஓட்டுனர் மீது இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    8:43 (IST)

    வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகத்தை ட்விட்டரில் நினைவு கூர்ந்த தமிழக ஆளுநர் ரவி!

    8:2 (IST)

    பழனி முருகன் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

    பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று ஒரு நாள் சேவை நிறுத்தம் செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    7:41 (IST)

    டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் இன்று தொடக்கம்!


    20 ஓவர் உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்குகிறது. முதல் சுற்றில் இலங்கை - நமீபியா மற்றும் நெதர்லாந்து - ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதுகின்றன.

    6:37 (IST)

    இன்றைய  (16.10.2022 ) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

    148 வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. அதன்படி 

    பெட்ரோல் விலை லிட்டர் - ரூ.102.63

    டீசல் விலை லிட்டர் - ரூ.94.24

    6:27 (IST)

    காவிரிக் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...!

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    6:25 (IST)

    மேட்டூர் அணை : நீர் திறப்பு 1,70,000 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு!

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை நீடிக்கும் காரணத்தால், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவிரிக் கரையோரங்களில் உள்ள 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கிறது.