Tamil News Live: திருப்பதி ஏழுமலையான் டிசம்பர் மாத ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு தேதி அறிவிப்பு

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | November 09, 2022, 19:07 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A MONTH AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    19:8 (IST)

    திருப்பதி ஏழுமலையான் டிசம்பர் மாத ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு தேதி அறிவிப்பு

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதத்துக்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் நாளை மறுநாள் 11ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பக்தர்கள் தேவஸ்தானத்தின்  https://tirupatibalaji.ap.gov.in/#/login
     இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    19:6 (IST)

    17:45 (IST)

    மின் கட்டணம் குறைப்பு - தமிழக அரசு 

    சிறு, குறு நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. உச்சபட்ச பயன்பாட்டு நேரத்திற்கான மின் கட்டணத்தை 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது பழைய கட்டணத்திலிருந்து 15 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

    17:32 (IST)

    மெட்டா நிறுவனத்தில் 11,000 பேர் பணி நீக்கம் - மார்க் அறிவிப்பு

    ட்விட்டர் நிறுவனத்தை தொடர்ந்து ஃபேஸ்புக்கை வழிநடத்தும் மெட்டா நிறுவனத்தில் 11,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். செலவுகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    16:58 (IST)

    டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நுழைந்தது பாகிஸ்தான் அணி

    சிட்னியில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது பாகிஸ்தான் அணி

    16:23 (IST)

    அடுத்த 2 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை

    அடுத்த 2 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், அரியலூர், நாமக்கல் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை மற்றும் தேனியில் லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    15:17 (IST)

    டி20 உலகக்கோப்பை அரையிறுதி: பாகிஸ்தான் அணிக்கு 153 ரன்கள் இலக்கு

    சிட்னியில் நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி 153 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4விக்கெட்டை இழந்து 152  ரன்களை எடுத்தது . அதிகப்பட்சமாக மிட்சேல் 53  ரன்களும், கேப்டன் வில்லியம்சன்  46 ரன்களை எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி 2 விக்கெட்டை வீழ்த்தினார்.

    14:23 (IST)

    நியூசிலாந்து அணி நிதான ஆட்டம்

    பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 3 முக்கிய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழந்து திணறி நிதான ஆட்டத்தை ஆடி வருகிறது

    13:1 (IST)

    தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வளிமண்டல சுழற்சி மேலும் வலுப்பெற்று, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறியது. இது அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, வரும் 12ம் தேதிக்குள் வடமேற்கு தமிழ்நாடு புதுச்சேரி கடற்கரை நோக்கி நகர்ந்து வரக்கூடும் - இந்திய வானிலை ஆய்வு மையம்