Tamil News Live: குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்தவருக்கு 2 லட்சம் நிதியுதவி - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | November 08, 2022, 21:10 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 25 DAYS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    21:9 (IST)

    குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்தவருக்கு நிதியுதவி - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

    மதுரை மாவட்டத்தில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்தவருக்கு ஆறுதல் மற்றும் இரண்டு லட்ச ரூபாய் நிதியுதவியை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 


    21:5 (IST)

    ஜி20 இலச்சினியை வெளியிட்டார் பிரதமர் மோடி

    இந்தியாவில் 2023 ஜி-20 மாநாடு நடைபெறவுள்ள நிலையில், டிச.1 முதல் ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கிறது. அதை முன்னிட்டு ஜி-20 இலச்சினை, கருப்பொருள், இணையதளத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். 

    19:28 (IST)

    10% இடஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக திமுக மனு - திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் 

    10 சதவீத இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து, அரசியல் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை பாதுகாத்திட திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீறாய்வு மனு தாக்கல் செய்யப்படும் 

    18:57 (IST)

    TNPSC Group 2/ Group 2A தேர்வு முடிவுகள் வெளியீடு 

    பிப்ரவரி 25ஆம் தேதி பிரதான தேர்வு நடத்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. 

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 பதவிகளுக்கான (TNPSC group 2 results) முதல்நிலைத் தேர்வை மே 21 ஆம் தேதி நடத்தது. இந்த தேர்வை சுமார் 9.5 லட்சம் பேர் தேர்வெழுதினர். இந்நிலையில் இந்த தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. 

    TNPSC Group 2 தேர்வு முடிவுகள்.

    17:41 (IST)

    கடலூரில் பள்ளத்தில் விழுந்த சிறுவன் பலி

    விருத்தாசலம் அருகே பேருந்து நிழற்குடை அமைக்க தோண்டிய பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் மூழ்கி 12 வயது சிறுவன் வினோத்குமார் உயிரிழப்பு.

    நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியமே உயிரிழப்பிற்கு காரணம் என மக்கள் குற்றச்சாட்டு. 

    16:2 (IST)

    திரையரங்கில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகு ஓ.டி.டியில் வெளியிட வேண்டும் - திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை. 

    ஓ.டி.டி யில் திரைப்படங்களை வெளியிடுவதால் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைத்து திரையுலகில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து ஆலோசிக்க கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்த வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்திற்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை.


    14:56 (IST)

    இடஒதுக்கீடு விவகாரம் - நவம்பர் 12ல் கூடுகிறது அனைத்து கட்சி கூட்டம் 

    10% இட ஒதுக்கீடு வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க நவம்பர் 12ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனையில் பங்கேற்க அனைத்து கட்சிகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். 


    12:45 (IST)

    10% இடஒதுக்கீடு தீர்ப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

    முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

    11:49 (IST)

    தமிழ்நாட்டில் புதிய காட்டுயிர் சரணாலயம்!

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 478 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான காட்டுப்பகுதியை ‘காவிரி தெற்கு காட்டுயிர் சரணாலயம்’ ஆக அறிவித்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

    11:49 (IST)

    தமிழ்நாட்டில் புதிய காட்டுயிர் சரணாலயம்!

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 478 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான காட்டுப்பகுதியை ‘காவிரி தெற்கு காட்டுயிர் சரணாலயம்’ ஆக அறிவித்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.