Tamil News Live: காங்கிரஸ் ட்விட்டர் பக்கத்தை முடக்க உத்தரவு

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | November 08, 2022, 01:52 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A YEAR AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    21:45 (IST)

    இலங்கையிலிருந்து கனாடா செல்ல முயன்ற இலங்கை தமிழர்கள் 306 பேர் பிலிப்பைன்ஸ் கடலில் தத்தளிப்பு

    இலங்கை தமிழர்கள் 306 பேர் கனடாவில் தஞ்சமடைய கடந்த மாதம் மியான்மர் சென்றனர். மியான்மரிலிருந்து கடல் மார்கமாக கனடா செல்ல முன்றபோது வியட்னாமிற்கும் பிலிபைன்ஸூக்கிடைய கப்பல் விபத்துக்குள்ளானதாக தகவல்.

    21:6 (IST)

    காங்கிரஸ் ட்விட்டர் பக்கத்தை முடக்க உத்தரவு 

    கே.ஜி.எப் பாடலை வீடியோவில் உபயோகித்ததால், காங்கிரஸ் ட்விட்டர் பக்கத்தை தற்காலிகமாக முடக்க உத்தரவு 


    18:23 (IST)

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய கோரிய மனு தள்ளுபடி....

    விசிக வழக்கறிஞர் காசி என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு


    16:51 (IST)

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி 21 கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் 
     
    ஸ்டெர்லைட் ஆலையை சுற்றுவட்டார கிராமங்களான தெற்கு வீரபாண்டியபுரம், சோரீஸ்புரம், வடக்கு சிலுக்கன்பட்டி, ராஜாவின் கோவில், மடத்தூர், பண்டாரம்பட்டி உள்ளிட்ட 21 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

    15:36 (IST)

     “பிரக்ஞானந்தா” பெயர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை


    14:50 (IST)

    10,11,12 ஆம் வகுப்புபொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

    2022 - 2023 கல்வியாண்டிற்கான 10,11,12ம் வகுப்பு  பொதுத்தேர்வுக்கான தேதிகள் மற்றும் கால அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியீட்டு வருகிறார். 

    அதன்படி, அதன் விவரம் பின்வருமாறு 

    10 ஆம் வகுப்பு: 

    தொடங்கும் தேதி - 06/04/2023

    முடியும் தேதி - 20/04/2023


    11 ஆம் வகுப்பு: 

    தொடங்கும் தேதி - 14/03/2023

    முடியும் தேதி - 05/04/2023


    12 ஆம் வகுப்பு: 

    தொடங்கும் தேதி - 13/03/2023 

    முடியும் தேதி - 03/04/2023

    13:24 (IST)

    அதிமுக தான் பெரிய கட்சி அவர்கள் தலைமையில் தான் கூட்டணி  - அண்ணாமலை 

    வரும் 15ம் தேதி 1500 இடத்தில் பால் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் 

    சொத்துவரி, மின் கட்டணம்  கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் - அண்ணாமலை 


    10:58 (IST)

    10% இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தின் 4  நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்

    10:55 (IST)

    10% இடஒதுக்கீடுக்கு 3 நீதிபதிகள் ஆதரவு!

    10% இடஒதுக்கீடு வழக்கில் 4 தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 3 நீதிபதிகள் 10% இடஒதுக்கீடுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    நீதிபதி தினேஷ் மகேஷ்வரி தீர்ப்பு: 
    உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு அடிப்படை அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது அல்ல.

    10:48 (IST)

    10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கில் 4 விதமான தீர்ப்பு  கொடுக்கப்பட்டுள்ளது