Copa America 2021 Final | Argentina vs Brazil: தோல்வியால் கண்ணீர் விட்டு கதறிய பிரேசில் நட்சத்திரம் நெய்மார்

தோல்விக்குப் பிற்கு கண்னீர் விட்டுக் கதறிய நெய்மார்.

கோப்பா அமெரிக்கா 2021 கால்பந்து தொடரில் அர்ஜெண்டீனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முந்தைய கோப்பா சாம்பியன் பிரேசிலை வீழ்த்தி கோப்பையை வென்றதில் மனம் துவண்டு போன பிரேசில் நட்சத்திரம் நெய்மார் ஆட்டம் முடிந்தவுடன் கண்ணீர் விட்டு கதறினார்.

  • Share this:
    கோப்பா அமெரிக்கா 2021 கால்பந்து தொடரில் அர்ஜெண்டீனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முந்தைய கோப்பா சாம்பியன் பிரேசிலை வீழ்த்தி கோப்பையை வென்றதில் மனம் துவண்டு போன பிரேசில் நட்சத்திரம் நெய்மார் ஆட்டம் முடிந்தவுடன் கண்ணீர் விட்டு கதறினார்.

    பிரேசில் மக்கள் முன்னிலையில் சொந்த மண்ணில் இந்த தோல்வியை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.

    மெஸ்ஸியா, நெய்மாரா என்று பார்க்கப்பட்ட இந்த மெகா கால்பந்து போட்டி மிகவும் நெருக்கடியாக ஆடப்பட்டது, விடாப்பிடியான கால்பந்தாட்டத்தில் மெஸ்ஸி கடைசியில் தன் வாழ்நாளின் முதல் கோப்பையை வென்றார். நெய்மார் ஜூனியர் அழுகையில் முடிந்தார்.

    Match Report:  Brazil vs Argentina Final | ‘ஏஞ்சல்’ டீ மரியாவின் கோல்- 28 ஆண்டுகளுக்குப் பின் அர்ஜெண்டீனா சாம்பியன்: போராடி வீழ்ந்தது பிரேசில்

    34 வயது ஏஞ்செல் டி மரியா தன் வயதை மீறிய வேகமும் சாதுரியமும் காட்டினார். ரோட்ரீகோ டி பால் அடித்த லாங் பாஸை பிரேசில் வீரர் ரெனான் லோடி கட் செய்ய தவறினார், இதனால் பந்தைப் பெற்ற டி மரியா அருமையாகக் கட்டுப்படுத்தி பவுன்ஸ் ஆன பந்தை காலி கோல் வலைக்குள் லேசாகத் தூக்கிவிட 1-0 என்று அர்ஜெண்டீனா முன்னிலை பெற்றது.



    இரண்டாம் பாதியில் பிரேசில் கடும் நெருக்கடி அளித்தாலும் 5 ஸ்ட்ரைக்கர்கள் கொண்ட பிரேசில் அணியினால் ஒரு கோலைக் கூட அடிக்க முடியவில்லை என்பது ஆச்சரியமே. ரோட்ரிகோ டி பால் அருமையான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார்.

    4 கோல்களுடன் மெஸ்ஸி, நெய்மார் சமமாகத் திகழ்ந்து இருவரும் இணைந்த சிறந்த வீரர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கடைசி விசில் அடிக்கப்பட்டவுடன் மைதான ஸ்க்ரீன் அர்ஜெண்டீனா சாம்பியன், லியோனல் மெஸ்ஸி சாம்பியன் என்று ஒளிர்ந்தது. நெய்மாரினால் கண்ணீரை அடக்க முடியவில்லை மண்டியிட்டு கண்ணீர் விட்டுக் கதறியது இன்றைய ட்ரெண்டிங் போட்டோவாக அமைய வாய்ப்பிருக்கிறது.

    இந்த வெற்றி அர்ஜெண்டீனாவின் 15வது கோப்பா அமெரிக்கா சாம்பியன் பட்டமாகும். உருகுவேயுடன் சமன் செய்துள்ளது. இந்த வெற்றியுடன் 20 போட்டிகளில் தோற்காமல் ஒரு தொடர்ச்சியை அர்ஜெண்டீனா கடைப்பிடித்து வருகிறது. 2018 உலகக்கோப்பையில் பெல்ஜியமிடம் தோற்று பிரேசில் வெளியேறிய பிறகு ஒரு மேஜர் தோல்வியை அர்ஜெண்டீனா பிரேசிலுக்கு பரிசாக அளித்தது.
    Published by:Muthukumar
    First published: