• HOME
  • »
  • NEWS
  • »
  • live-updates
  • »
  • பும்ரா போல் வீச முடியாதா? யார் சொன்னா?- வைரல் வீடியோ

பும்ரா போல் வீச முடியாதா? யார் சொன்னா?- வைரல் வீடியோ

பும்ரா பந்து வீசும் காட்சி.

பும்ரா பந்து வீசும் காட்சி.

இன்றைய கிரிக்கெட் உலகில் அனைவராலும் ரசிக்கப்படக்கூடிய ஒரு பவுலர் ஜஸ்பிரித் பும்ரா என்றால் அது மிகையல்ல. ஏனெனில் அவரது வித்தியாசமான ஆக்‌ஷன், பவுலிங் வீசும் முன் ஒரு வேக நடை, பிறகு நடையும் ஓட்டமுமாக ஒரு செய்கை பிறகு ஃபுல்லாக வந்து கையை தூக்கி ஒரே இறக்கு இறக்குகிறாரே அது ஒரு விநோதமான கடினமான ஆக்‌ஷன்.

  • Share this:
    இன்றைய கிரிக்கெட் உலகில் அனைவராலும் ரசிக்கப்படக்கூடிய ஒரு பவுலர் ஜஸ்பிரித் பும்ரா என்றால் அது மிகையல்ல. ஏனெனில் அவரது வித்தியாசமான ஆக்‌ஷன், பவுலிங் வீசும் முன் ஒரு வேக நடை, பிறகு நடையும் ஓட்டமுமாக ஒரு செய்கை பிறகு ஃபுல்லாக வந்து கையை தூக்கி ஒரே இறக்கு இறக்குகிறாரே அது ஒரு விநோதமான கடினமான ஆக்‌ஷன்.

    ஆனால் அந்தக் கடினமான ஆக்‌ஷனையே ஒரு பவுலர் இமிடேட் செய்து அப்படியே வீசுவது ஆச்சரியமாகத்தானே இருக்கும் அதுதான் இது வைரல் வீடியோவாகியுள்ளது. நடைபெற்று வரும் ஐரோப்பிய கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பில் ஒரு பவுலர் பும்ரா போலவே நடை, நடை ஓட்டம், பிறகு ஓட்டம் என்று ஓடி வந்து வீசும் காட்சி வைரலாகி 7,000 லைக்குகளை அள்ளியுள்ளது.

    பும்ரா போல் வீசுபவர்


    குறிப்பாக இந்த பவுலர் பந்தை ரீலீஸ் செய்யும் இடம் அப்படியே பும்ரா போலவே உள்ளது. ஆனால் பும்ராவின் வேகம் இருக்குமா என்று தெரியவில்லை, பார்த்தால் அவ்வளவு வேகம் போல் தெரியவில்லை. பும்ராவை இமிடேட் செய்வது சாதாரண விஷயமல்ல. ஓடி வருவது எல்லாம் செய்து விடலாம் முடிக்கும் போது பும்ராவின் கை எப்படி வருகிறது, பந்தின் தையல் பொசிஷன் ஆகியவற்றைக் கொண்டு வர பயிற்சி தேவைப்படும்.

    அதன் பிறகு லெந்த், லைன் ஸ்விங் என்று ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன, எனவே பும்ரா போல் வீசுவது என்றால் வெறும் ரன் அப் மட்டுமல்ல, ஆக்‌ஷன் மட்டுமல்ல, இவ்வளவு விஷயங்களைப் பார்க்க வேண்டியுள்ளது, ஆனால் நெட்டிசன்களுக்கு ஒருவர் இமிடேட் செய்கிறாரா அது ஓரளவுக்கு ஒரிஜினல் போல தோற்றம் தருகிறதா? அவ்வளவுதான் லைக்குகளை அள்ளி வழங்குவார்கள்.



    மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தற்போது பும்ரா யுஏஇயில் ஆடி வருகிறார் 11 ஆட்டங்களில் இதுவரை 16 விக்கெட்டுகளை ஐபிஎல் 2021-ல் கைப்பற்றியுள்ளார். அன்று உஷ் கண்டுக்காதீங்க ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸை வெற்றி பெறச்செய்ததில் மும்பை அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு தக்கவைக்கப்பட்டுள்ளது.

    Also Read: CSK vs SRH IPL 2021: நாங்கதான் பலமா திரும்பி வருவோம்னு சொன்னோம்ல: தோனி

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: