சட்டம் - ஒழுங்கு விவகாரத்தில் கடும் நடவடிக்கை இல்லை; வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற முடியாது - சி.பி ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் அரசு கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் தேர்தலில் அதிமுக வெற்றிபெற முடியாது என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சட்டம் - ஒழுங்கு விவகாரத்தில் கடும் நடவடிக்கை இல்லை; வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற முடியாது - சி.பி ராதாகிருஷ்ணன்
சி.பி ராதாகிருஷ்ணன்
  • News18
  • Last Updated: July 21, 2020, 3:38 PM IST
  • Share this:
கோவை கட்சி அலுலவகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிபி ராதாகிருஷ்ணன் கூறுகையில், கோவில்கள் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் மாநில அரசு மெத்தன போக்குடன் செயல்படுகின்றது. இது கண்டனத்திற்குரியது.

கோவில் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் காவல் துறையினரை சுதந்திரமாக இந்த அரசு செயல்படவிடவில்லை.

நடுநிலையோடு நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்க கூடாது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியை நாட பா.ஜ.க தயங்காது. பா.ஜ.க தேர்தலை பற்றி கவலைப்படாது. முதல் சிந்தனை மக்களின் பாதுகாப்பும், உயிர் உத்திரவாதம் இருப்பதும்தான் என்று கூறினார். 

கோவில்கள் தாக்குதல் தொடர்பாக மாநகர காவல் ஆணையரை சந்தித்து புகார் அளிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
First published: July 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading