ஆரி - ரியோ இடையே திடீரென வெடிக்கும் பிரச்னை

பிக்பாஸ்

சுரேஷ் சக்ரவர்த்தி வருகை தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு அழைப்பு வரவில்லை என அவர் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருக்கிறார்.

 • Share this:
  பிக்பாஸ் நிகழ்ச்சி 6 போட்டியாளர்களுடன் இறுதி வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பது இந்தவார ஞாயிற்றுகிழமை தெரிந்துவிடும். ஆரி தான் வெற்றி பெறுவார் என பார்வையாளர்கள் கணித்துள்ளனர். இது கடைசி வாரம் என்பதால், இந்த சீசனில் வெளியேறிய போட்டியாளர்கள் தற்போது வருகை தர தொடங்கியுள்ளனர்.

  இதனால் நிகழ்ச்சி கலைக்கட்டியுள்ளது. நேற்று அர்ச்சனா, நிஷா, ஜித்தன் ரமேஷ், ரேகா வருகை தந்துள்ள நிலையில் இன்று சுசித்ரா மற்றும் சம்யுக்தா வருவது இன்று வெளியான முதல் ப்ரமோவில் உறுதியானது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரமோவில், சனம், ஆஜித், வேல்முருகன் வந்திருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் அதில் கேபி, டாஸ்க்கிற்காக குரூப் பிரிப்பது போல தெரிகிறது . அப்போது பாலாஜி நாங்கள் 3 பேர் என கூறுகிறார். அதற்கு கேபி, ஆரி அண்ணா உங்களுக்கு ஓகேவா என கேட்க, அதற்கு ஆரி யோசித்து தலையசைக்கிறார்.

  இதனைப் பார்த்து குறுக்கிட்ட ரியோ, அவள் தான் நான்கு முறை கேட்டுவிட்டாரே உங்களுக்கு ஓகேவா இல்லையா ? சொல்லுங்கள் ப்ரோ என சிரித்துக்கொண்டே கேட்க , அதற்கு ஆரி நான் தான் ஓகே சொல்லிவிட்டேன். நீங்கள் கேட்டது பதில் சொல்லாமல் நான் இழுத்தடிப்பது போல தோற்றம் தருகிறது என்கிறார். அதற்கு ரியோ, நான் எந்த விதமான தவறான நோக்கத்துடன் கேட்கவில்லை. நான் இடையில் வந்த கேட்டது தப்பு தான் சாரி என்கிறார். அப்போது ஆரியும் ரியோவிடம் மன்னிப்பு கேட்கிறார்.  இதனிடையே சுரேஷ் வருகை தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு அழைப்பு வரவில்லை என அவர் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை தந்துள்ளது. இதேபோல அனிதாவும் அவரது தந்தை மறைவையொட்டி வர வாய்ப்பில்லை என எதிர்பார்க்கப்படுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sheik Hanifah
  First published: