ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அதிரடி மாற்றங்கள்!

ICC Rankings |

Vijay R | news18-tamil
Updated: August 27, 2019, 6:36 PM IST
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அதிரடி மாற்றங்கள்!
விராட் கோலி
Vijay R | news18-tamil
Updated: August 27, 2019, 6:36 PM IST
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் கிங் கோலி தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளார். யாக்கர் மன்னன் பும்ரா, ஆஷஸ் நாயகன் பென் ஸ்டோக்ஸ் வேகமாக முன் வரிசைக்கு வந்துள்ளனர்.

ஐசிசி வெளியிட்டுள்ள பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் பென் ஸ்டோக்ஸ் 13வது இடத்தையும், ஆல்-ரவுண்டர்களில் 2-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் சதம் விளாசி தனி ஒருவராக போராடி இங்கிலாந்தை வெற்றி பெற செய்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே 81 மற்றும் 102 ரன்கள் விளாசினார்.இதையடுத்து 21வது இடத்தில் இருந்த ரஹானே பத்து இடங்கள் முன்னேறி 11வது இடத்திற்கு வந்துள்ளார். புஜாரா தொடர்ந்து 4வது இடத்தில் உள்ளார்.


பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் பும்ரா 10வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். டாப்10 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதன்முறையாக பும்ரா அடியெடுத்து வைத்துள்ளார். முகமது ஷமி 2 இடங்கள் முன்னேறி 19வது இடத்திலும், இஷாந்த் சர்மா 4 இடங்கள் முன்னேறி 21வது இடத்திலும் உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் 2 இடங்கள் முன்னேறி 43வது இடத்தில் உள்ளார்.

Also Watch

Loading...

First published: August 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...