PubG: பப்ஜி பிரியர்களுக்கு குட் நியூஸ்; பிளே ஸ்டோரில் பேட்டில்கிரவுண்ட் கேம்

PUBG

ஒருவர் தனது பெயரில் 10 பேட்டில்கிரவுண்ட் வீடியோ அக்கவுண்ட் வைத்துக் கொள்ள முடியும்

  • Share this:
கூகுள் பிளே ஸ்டோரில் இடம்பெற்றுள்ள பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா வீடியோ கேம் -ஐ வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்து விளையாடலாம்.

இந்தியாவில் பப்ஜி வீடியோ கேம் தடை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் யூசர்களின் தரவுகள் பாதுகாப்பு தொடர்பாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் பப்ஜியை மத்திய அரசு தடை செய்தது. மேலும், இந்த கேமில் இடம்பெற்றிருந்த பல்வேறு சுற்றுகள், நிர்வாண படங்கள், ரத்தம் ஆகியவை இளைஞர்களின் மனதை நேரடியாக பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் பெற்றோர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது ஒருபுறமிருக்க, பப்ஜி கேமுக்கு முழுவதுமாக அடிமையான சில சிறுவர்கள், அதன் ஐடியை வாங்குவதற்காக பெற்றோர்களுக்கு தெரியாமல் பணத்தை எடுத்து செலவழித்ததும் நடந்தது. இதனால், இந்த கேமை மீண்டும் அனுமதிக்க கூடாது என பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

Also Read:   புதிய படத்தில் பவித்ரா லக்ஷ்மி! பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்த இயக்குநர்

இருப்பினும், சிலர் வி.பி.என்-மூலம் முறைகேடாக பப்ஜியை விளையாடி வந்தனர். ஆயிரக்கணக்கானோர் மீண்டும் எப்போது பப்ஜி இந்தியாவில் அறிமுகமாகும் என்ற ஏக்கத்தில் இருந்தனர். பப்ஜி வீடியோ கேமை உருவாக்கிய கிராப்டன் நிறுவனம், இந்தியாவில் மீண்டும் பப்ஜி விளையாட்டை கொண்டு வருவதில் தீவிரமாக செயல்பட்டது. இது குறித்து மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி, அதன் முடிவில் பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா என்ற பெயரில், பப்ஜி-க்கு நிகரான வீடியோ கேமை வடிவமைத்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோரிலும் 'பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா' என்ற பெயரில் வெளியாகியுள்ளது.

Also Read:     தந்தையின் இறப்பிற்கு காரில் சென்ற போது ஆர்ஜே ஆனந்தி செய்த காரியம்.. சமூக வலைத்தளங்களில் விவாதம்!

ஆன்டிராய்டு வெர்சனில் மட்டும் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ கேம், அதிகாரப்பூர்வமாக  வெளியிடப்பட்டது.. LINK: http://bit.ly/BATTLEG_OPENBETA_FB என்ற லிங்கில் சென்று அதிகாரப்பூர்வமாக பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா கேமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் ஓ.டி.பி எண்ணைப் பயன்படுத்தி மட்டுமே கேம் விளையாட முடியும். உங்களுக்கு வந்திருக்கும் ஓ.டி.பி எண்ணை பதிவிட்டும், கேம் திறக்கவில்லை என்றால், மீண்டும் ஓ.டி.பி எண்ணுக்காக முயற்சிக்க தேவையில்லை. 5 நிமிடங்களுக்குள் 3 முறை ஒரே ஓ.டி.பி எண்ணை உபயோகித்துக் கொள்ளலாம். ஒருவர் தனது பெயரில் 10 பேட்டில்கிரவுண்ட் வீடியோ அக்கவுண்ட் வைத்துக் கொள்ள முடியும் என பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா தெரிவித்துள்ளது. 24 மணி நேரத்தில் 10 முறை மட்டுமே ஓ.டி.பிக்காக விண்ணப்பிக்க முடியும் என்றும் தெளிவாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏராங்கல் (Erangel), ஷான்காக் (Sanhok), மிராமர் (Miramar) மற்றும் விகெண்டி (Vikendi) என்ற 4 மொபைல் பேட்டில்கிரவுண்ட் மேப்கள் இருக்கிறது. ஒவ்வொன்றும் வித்தியாசமான வடிவமைப்பு மற்றும் விறுவிறுபுக்கு பஞ்சமில்லாத வகையில் புதிய பேட்டில்கிரவுண்ட் கேம் இருக்கும் என நிறுவனம் கூறியுள்ளது. யூசர்களும் அதே எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

 
Published by:Arun
First published: