அரை நிர்வாணத்துடன் வந்து வாக்கு பதிவு செய்த விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு

அரை நிர்வாணத்துடன் வந்து வாக்கு பதிவு செய்த விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு

விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு

திருச்சியில் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு அரை நிர்வாணத்துடன் வந்து வாக்கு பதிவு செய்தார்.

 • Share this:
  திருச்சி மாவட்டத்தில், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, மணப்பாறை, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், லால்குடி, மண்ணச்சநல்லூர் முசிறி, துறையூர் (தனி) என மொத்தம் 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது. மாவட்டத்தில் மொத்தம் 159 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

  இந்நிலையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு இன்று தனது வாக்கினை திருச்சி மேற்கு தொகுதி உட்பட்ட உறையூர் சோழராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதிவு செய்தார். தனது வாக்கினை பதிவு செய்ய மேல் சட்டை இல்லாமல் அரை நிர்வாணத்துடன் வந்து வாக்கினை பதிவு செய்தார்.

  அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இன்னும் மத்திய மாநில அரசுகள் விவசாயிகளை ஏமாளிகளாக பார்த்து வருகிறது. அரவாக்குறிச்சி, திருவண்ணாமலையில் எங்களுடைய வேட்பு மனுக்களை நிராகரித்தது. அதற்கு நீதி மன்றம் செல்வோம், மீண்டும் தேர்தல் நடத்த கோரிக்கை விடுக்கிறோம்” என்று தெரிவித்தார்.

  மேலும் படிக்க...திருச்சியில் இயந்திர கோளாறு காரணமாக சில இடங்களில் தாமதமான வாக்குபதிவு

  செய்தியாளர் : கதிரவன்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: