அய்யா வைகுண்டர் அவதார தினத்தை தமிழக அரசு பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் - சரத்குமார்

சரத்குமார்

அய்யா வைகுண்டர் அவதார தினத்தன்று கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பொதுவிடுமுறை அளிக்கப்படுகிறது.

 • Share this:
  அய்யா வைகுண்டர் அவதார தினத்தை தமிழக அரசு பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்மீக சீர்த்திருத்தவாதியும், ஜாதி கொடுமைகளை எதிர்த்து ஒதுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டவரும், சமத்துவம், சமூகநீதி, சுயமாரியாதையை ஊக்குவித்தவரும், குட்சும வடிவில் மக்களுக்கு அருள் புரிந்து கடவுள் அவதாரமாக கருதகப்படுவருமான அய்யா வைகுண்டர் அவதார நாளான மாசி 20-ம் தேதி ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடுவோம்.

  அய்யா வைகுண்டர் அவதார தினத்தன்று கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பொதுவிடுமுறை அளிக்கப்படுகிறது. இருப்பினும் ஜாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அய்யா வைகுண்டாரை பின்பற்றும் மக்கள் தமிழகமெங்கும் வணங்கி வருவதால் மாசி மாதம் 20-ம் தேதி (மார்ச் 4) அன்று தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிக்குமாறு தமிழக முதல்வரிடம் சமக சார்பில் கோரிக்கையை முன்வைக்கிறேன்“ என்றுள்ளார்.
  Published by:Vijay R
  First published: