JUST NOW

  • Associate Partner
  • deepavali
  • deepavali
  • deepavali
Home » News » Live-updates » AWESOME WOMAN SELLING BIRYANI IN DINDIGUL VJR

தீபாவளிக்கு இப்போதே 350 கிலோ ஆர்டர்... திண்டுகல்லில் பிரியாணி விற்பனையில் அசத்தும் பெண்

மோகன பிரியா இவர் 1995ம் ஆண்டு சிறிய கடையாக ஆரம்பித்து இன்றைக்கு 4 கடைகளை திறந்திருக்கிறார்.

  • Share this:
திண்டுக்கல்லில் கொரோனா காலத்திலும் பெண் ஒருவர் நடத்தி வரும் பிரியாணி கடையில் தீபாவளிக்காக ஆர்டர்கள் குவிகின்றன. திண்டுக்கல்லை சேர்ந்த மோகனப்பிரியா என்பவர் 25 ஆண்டுகளாக சிறிய அளவில் பிரியாணி கடை நடத்தி வந்தவரின் பிரியாணிக்கு பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளித்ததை தொடர்ந்து 4 கடைகளை நடத்தி வருகிறார்.

ஆம்பூர் பிரியாணி, வாணியம்பாடி பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி என்று பல ஊர்களில் விதவிதமாக பிரியாணி தயாரிக்கப்படுகிறது. இந்த வரிசையில் திண்டுக்கல் பிரியாணியும் உலகம் முழுவதும் பெயர் பெற்றதாகும். மிகவும் சிறிய அளவில் உள்ள சீரகச்சம்பா அரிசியைக் கொண்டு, செம்மறி ஆடு, மற்றும் வெள்ளாடு கறியைக் கொண்டு தயாரிக்கப்படும் பிரியாணிக்கு திண்டுக்கல் மக்கள் அடிமை என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு இந்த பிரியாணியில் வாசனைப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

பிரியாணியை சிறப்பாக செய்து தருபவர்களுக்கு சிறந்த ஆதரவை திண்டுக்கல் மக்கள் தொடர்ந்து தந்து வந்திருக்கிறார்கள். அப்படி மக்களின் ஆதரவை பெற்ற ஒரு பெண்  மோகன பிரியா இவர் 1995ம் ஆண்டு சிறிய கடையாக ஆரம்பித்து இன்றைக்கு 4 கடைகளை திறந்திருக்கிறார்.  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த பெண்ணிடம் அதிகமான ஆர்டர்கள் குவியத் தொடங்கியுள்ளது. இப்போதே 350 கிலோவுக்கு ஆர்டர்கள் குவிந்து உள்ளது. பெரிய பெரிய கடைகளில் ஒரு படி பிரியாணி விலை ரூ.2800க்கு விற்கப்படுகிறது. ஆனால் மிகக் குறைந்த விலையில் இந்த 2200 க்கு  பெண்மணி சுவையான பிரியாணியை வழங்குகிறார்.



மற்ற கடைகளில் நவீன இயந்திரங்களைக் கொண்டு செய்யப்படும்  பிரியாணியை போல அல்லாமல் காலம் காலமாக பிரியாணி செய்ய பின்பற்றப்படும் நெருப்பை மூடியில் கொட்டி தம் போட்டு எடுப்பதால் பிரியாணி சுவையுடன் இருக்கிறது. பிரியாணி தயாரிக்கிற பக்குவ முறையை தொடர்ந்து கடைபிடிக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றன. அந்த வகையில் இந்த பெண்மணியும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்.
First published: November 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading