AUSvPAK | ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பரபரப்பான போட்டியில் பாகிஸ்தான் தோல்வி!

ICC World Cup 2019 | ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர் வார்னர் அதிகபட்சமாக 107 ரன்கள் குவித்தார்.

Web Desk | news18
Updated: June 12, 2019, 10:36 PM IST
AUSvPAK | ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பரபரப்பான போட்டியில் பாகிஸ்தான் தோல்வி!
AUSvPAK
Web Desk | news18
Updated: June 12, 2019, 10:36 PM IST
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பரபரப்பான போட்டியில் ஆஸ்திரேலியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் 17-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக வார்னர், பின்ச் களமிறங்கினார். பொறுப்புடன் விளையாடிய இவர்கள் ரன்குவிப்பில் ஈடுப்பட்டனர். ஆரம்பத்தில் பொறுமையாக விளையாடிய கேப்டன் பின்ச். பின் அதிரடியாக விளையாடி 84 பந்துகளில் 82 ரன்கள் குவித்து அவுட்டானார்.



அடுத்து களமிறங்கிய ஸ்மித் 10 ரன்னிலும், மேக்ஸ்வெல் 20 ரன்னிலும் அவுட்டாகினர்.  மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகியதால் ஆஸ்திரேலியா அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர் வார்னர் அதிகபட்சமாக 107 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் அணியில் அபாரமாக பந்துவீசிய முகமது அமீர் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து 308 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஜமான் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

மற்றொரு தொடக்க வீரரான இமாம்-உல்-ஹக் நிதனமாக விளையாடி அரைசதம் அடித்து அவுட்டானார். கேப்டன் சர்பராஜ் அஹமது பொறுப்புடன் விளையாடி பாகிஸ்தான் அணியை தடுமாற்றத்தில் இருந்து மீட்டார். ஆனால் மற்ற வீரர்கள் யாரும் நிலைத்துநின்று ஆடாததால் பாகிஸ்தான் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Also Watch

First published: June 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...