மூன்று, நான்கு கேட்ச்களை விட்டோம், ரஹானே அடித்தது அதிர்ஷ்ட சதம்: மிட்செல் ஸ்டார்க் கருத்து

ரஹானே கேப்டன் இன்னிங்ஸ்.

அவர் சதம் அடிப்பதற்கு முன்பாக 3-4 முறை அவரை அவுட் ஆக்கியிருக்க வேண்டியது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக கேட்ச்கள் கோட்டை விடப்பட்டன.

 • Share this:
  இந்திய கேப்டன் அஜிங்கிய ரஹானேவின் அசாத்திய சதத்தை மிட்செல் ஸ்டார்க் பாராட்டினாலும் அவருக்கு 3,4 வாய்ப்புகளைக் கோட்டை விட்டோம் என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

  ரஹானேவுக்கு ஸ்மித் உள்ளிட்டோர் 3-4 கேட்ச்களை கோட்டை விட்டனர். அதில் நேற்று கடைசி ஓவரில் ஸ்டார்க் பந்தில் ஒரு கேட்ச் விடப்பட்டது. ஆனால் ரஹானே இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு தற்போது இட்டுச் சென்றுள்ளார்.

  மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று ஆஸ்திரேலியா 133/6 என்று இரண்டு ரன்களே முன்னிலை பெற்றுள்ளது, கமின்ஸ், கிரீன் இருவரும் 18 ஓவர்களைத் தாக்குப் பிடித்து நாளை மீண்டும் தொடங்கவிருக்கின்றனர்.  இந்நிலையில் மிட்செல் ஸ்டார்க் கூறியதாவது:

  ரஹானேவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. எங்கள் முதல் இன்னிங்ஸ் ஸ்கோருக்குக் குறைவாக இந்திய அணி ஸ்கோர் இருந்த போது ரஹானே கப்பலை சரியாக வழிநடத்திச் சென்றார்.

  அவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புகளை அவர் தன் கையில் எடுத்துக் கொண்டார். அவர் சதம் அடிப்பதற்கு முன்பாக 3-4 முறை அவரை அவுட் ஆக்கியிருக்க வேண்டியது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக கேட்ச்கள் கோட்டை விடப்பட்டன. அவருக்கு அதிர்ஷ்டம் இருந்தது, நல்ல சதம் எடுத்தார்.

  எங்களுக்கு சரியான நாளாக அமையவில்லை. சில வாய்ப்புகளை உருவாக்கினோம் ஆனால் அந்த அரை வாய்ப்புகளெல்லாம் தரைதட்டின. நாங்கள் நன்றாக ஆடினோம் ஆனால் அதன் பலனை எய்தவில்லை.

  எனக்கு சொந்த மைல்கல் மீது அதிக நாட்டமில்லை. 250 விக்கெட்டுகளை வீழ்த்தியது மகிழ்ச்சிதான், ஆனால் ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே இப்போதைய கவனம்.

  இவ்வாறு கூறினார் ஸ்டார்க்.
  Published by:Muthukumar
  First published: