• HOME
  • »
  • NEWS
  • »
  • live-updates
  • »
  • அசாம் அமைச்சரின் மருமகன் எனக்கூறி ₹1.25 கோடி மோசடி செய்த நபர் நிர்வாணமாக்கி மிரட்டல்!

அசாம் அமைச்சரின் மருமகன் எனக்கூறி ₹1.25 கோடி மோசடி செய்த நபர் நிர்வாணமாக்கி மிரட்டல்!

கார்த்திக் பிரசன்னா

கார்த்திக் பிரசன்னா

இவருக்கு அறிமுகமான  கார்த்திக் பிரசன்னா என்பவர், தான் அசாம் மாநில அமைச்சரான ராஜன் கொஹைனின் மருமகன் என தெரிவித்துள்ளார்.

  • Share this:
சென்னை விருகம்பாக்கம் இளங்கோ நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர் சைதாப்பேட்டையில் தொலைதூர கல்வி நிலையத்தை வைத்து நடத்திவருகிறார். இவருக்கு அறிமுகமான  கார்த்திக் பிரசன்னா என்பவர், தான் அசாம் மாநில அமைச்சரான ராஜன் கொஹைனின் மருமகன் என தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் இந்திய விமான படையில் பைலட் எஸ்கார்ட் ஆபிசராக இருப்பதாக அடையாள அட்டை காண்பித்துள்ளார்.

ரயில்வே துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும், தலா ஒருவருக்கு 3.5 லட்ச ரூபாய் கொடுத்தால் வேலை வாங்கி தருவதாகவும், தனக்கு கமிஷன் தொகையாக 25 ஆயிரம் ரூபாயும், ஏஜெண்டாக வேலை பெற்று தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி கடந்த 2018 ஆம் ஆண்டு பொதுமக்களிடம் பெற்ற 1.25 கோடி ரூபாய் பணத்தை கார்த்திக் பிரசன்னாவின் மனைவியான ஜூரி ராணி தேவியின் வங்கி கணக்கிற்கு முத்துக்குமரன் அனுப்பியுள்ளார்.
ஆனால் நீண்ட மாதமாக பணி வாங்கி தராததால் சந்தேகமடைந்து ரயில்வேயில் சென்று விசாரித்த போது கார்த்திக் பிரசன்னா அசாம் அமைச்சரின் மருமகன் கூறியது பொய் என்றும், இதே போல் பல பேரிடம் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதனால் கார்த்திக் பிரசன்னாவிடம் பணத்தை திருப்பி கேட்டதற்கு எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கம் அருகே வரக்கூறினர், அப்போது அடையாளம் தெரியாத 4 நபர்கள் போலீஸ் எனக்கூறி காரில் கடத்தி சென்றனர். பின்னர் கொடைக்கானலுக்கு கடத்தி சென்று விடுதியில் அடைத்துவைத்து நிர்வாணமாக்கி மிரட்டி, வேலை வாங்கி தருவதாக பொதுமக்களிடம் பணத்தை பெற்று ஏமாற்றியது நான் தான் என செல்போனில் வீடியோ எடுத்து வைத்து 80 ஆயிரம் பணத்தையும் பறித்து தப்பி சென்றனர்.

Also read:  கொள்ளையடித்த பணத்தில் இரண்டு மனைவிகளை சொகுசு வாழ்க்கை வாழவைத்த பலே கில்லாடி!

பின்னர் மதுரை ரவுடி கணபதி, கார்த்திக் பிரச்சன்னா, மற்றும் ஐபி.எஸ் அதிகாரி ஒருவருக்கு பாதுகாப்பு காவலராக இருக்கக்கூடிய அருண்குமார் இணைந்து மீண்டும் தன்னிடம் 15 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

1.25 கோடி பணத்தை பறித்துவிட்டு மிரட்டிய கார்த்திக் பிரசன்னா, காவலர் அருண்குமார், ரவுடி கணபதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முத்துக்குமார் புகார் அளித்தார்.
இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கார்த்திக் பிரசன்னா, ரவுடி கணபதி மற்றும் காவலர் அருண் குமார் அகியோர் மீது கொலை மிரட்டல், ஆட்கடத்தல் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவத்தில் ரவுடி கணபதியை கைது செய்த போலீசார் மற்ற இருவரை தேடி வருகின்றனர்.

Also read:  இனி ஏசி தேவையில்லை.. இந்த வெள்ளை பெயிண்டை அடித்தால் போதும்.. ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு!

மேலும் பணமோசடி விவகாரத்தில் கடத்தப்பட்ட புகார்தாரான முத்துகுமார் பணமோசடி விவகாரத்தில் உடந்தை என்பதும் ஆனால் அவர் மீது தற்போது வரை காவல் நிலையத்தில் புகார் வரவில்லை என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் புகார் தரும்பட்சத்தில் முத்துக்குமார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: