ஆஷஸ் தொடரில் அடுத்தடுத்து விலகும் இங்கிலாந்து வீரர்கள்!

Web Desk | news18-tamil
Updated: August 8, 2019, 7:37 PM IST
ஆஷஸ் தொடரில் அடுத்தடுத்து விலகும் இங்கிலாந்து வீரர்கள்!
இங்கிலாந்து அணி
Web Desk | news18-tamil
Updated: August 8, 2019, 7:37 PM IST
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாரம்பரியமான ஆஷஸ் தொடர் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆரம்பமானது.

ஆஷஸ் தெடாரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில இமாலய வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து விளாசினார்.

ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயான் 2 இன்னிங்சையும் சேர்த்து 9 விக்கெட்களை வீழ்த்தினார். ஸ்மித், லயான் இருவரும் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு ஆற்றினர்.

ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் லயான்


ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் தொடரில் 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விலகி உள்ளார். முதல் இன்னிங்சில் பந்துவிசீய போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 4 ஓவர்கள் மட்டுமே வீசினார். 2வது இன்னிங்சில் அவர் பந்துவீசாமல் இருந்தது, அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ஸ்டோன் முதுகுவலி காரணமாக அடுத்த டெஸ்ட் போட்டியிலிருந்து விலகி உள்ளார். அடுத்த 2 வாரத்திற்கு அவர் ஓய்வெடுக்க வேண்டுமென்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அடுத்தடுத்து இங்கிலாந்து வீரர்கள் ஆஷஸ் தொடரிலிருந்து விலகி வருவதால் அந்த அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...