முகப்பு /செய்தி /Breaking and Live Updates / நாட்டிற்காக இரண்டு முறை குண்டடிப்பட்டும் தீவிரவாதிகளுடன் போராடிய ராணுவ நாய் - வைரலாகும் புகைப்படம்

நாட்டிற்காக இரண்டு முறை குண்டடிப்பட்டும் தீவிரவாதிகளுடன் போராடிய ராணுவ நாய் - வைரலாகும் புகைப்படம்

ராணுவ நாய்

ராணுவ நாய்

இந்திய ராணுவ பயிற்சி பெற்ற நாய் ஒன்று தீவிரவாதிகளால் சுடப்பட்ட பின்னரும் கூட அவர்களுடன் போராடி அவர்களை பாதுகாப்புப் படையினரிடம் பிடித்துக் கொடுத்துள்ளது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

  • Last Updated :
  • Jammu, India

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் தங்ப்வராரா பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த வீடு ஒன்றில் பயங்கரவாதிகள் தங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த வீட்டில் சோதனை நடத்த ராணுவத்தில் பயிற்சி பெற்ற ஜூம் என்ற நாய் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஜூம் ராணுவத்தில் மிக சிறப்பான பயிற்சி பெற்ற நாயாகும். அது மிகவும் ஆக்ரோஷமாக செயல்படும். தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட வீட்டில் ஜூம் நுழைந்துள்ளது. இதை கவனித்த பயங்கரவாதிகள் அதன் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் ஜூம் மீது இரண்டு குண்டுகள் தாக்கி உள்ளது. ஆனாலும் ஜூம் பயங்கரவாதிகளை கடுமையாக தாக்கி உள்ளது.

இதையடுத்து அந்த வீட்டில் இருந்த பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்னர். பயங்கரவாதிகள் தாக்குதலில் படும்காயம் அடைந்த ஜூம் நாய் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறது. ஜூம் விரைந்து நன்றாக குணமடைய வாழ்த்துகிறோம் என இந்திய ராணுவத்தினர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Jammu and Kashmir