• HOME
  • »
  • NEWS
  • »
  • live-updates
  • »
  • புதுச்சேரியில் ஆயுதப்படை காவலர் தற்கொலை

புதுச்சேரியில் ஆயுதப்படை காவலர் தற்கொலை

புதுச்சேரியில் ஆயுதப்படை காவலர் தற்கொலை

புதுச்சேரியில் ஆயுதப்படை காவலர் தற்கொலை

புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  • Share this:
    புதுச்சேரி இந்தியன் ரிசர்வ் பட்டாலியன் பிரிவில் காவலராக இருப்பவர் பாலாஜி. ஆறு மாதத்திற்கு முன்புதான் இவருக்கு திருமணம் நடைபெற்று உள்ளது. கோரிமேடு பகுதியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் உள்ள IRBN அலுவலகத்தில் நேற்று பணியாற்றி வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு காவலர் பாலாஜி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
    காலை நடைபயணம் செய்த காவலர்கள் சடலத்தை பார்த்து தன்வந்திரி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அதனை அடுத்து உடலை கைப்பற்றிய தன்வந்திரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் நடந்து 6 மாதம் என்பதால் குடும்ப பிரச்சனையா என்றும் அல்லது மேலதிகாரிகளின் அழுத்தத்தின் காரணமா என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பாலாஜி  மாத சீட்டு பிடிக்கும் வேலையும் செய்து வருகிறார். அதில் பணத்தகராறு ஏதாவது ஏற்பட்டு அதுவே தற்கொலைக்கு காரணமாக அமைந்து விட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    Also see...

    சமூகப் பரவல் ஏற்படாத நிலையை உருவாக்க அரசு பாடுபட்டு வருகிறது - அமைச்சர் விஜய பாஸ்கர்






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: