ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுச்சேரியிலும் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.
இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ஏற்கனவே இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், மூன்றாவதாக முதலியார்பேட்டையை சேர்ந்த 82 வயது முதியவர், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவித்தார்.
அவரது குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுச்சேரியைச் சேர்ந்த 84 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் சூழலில், புதியதாக 6 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.