• HOME
  • »
  • NEWS
  • »
  • live-updates
  • »
  • ’இளமையான தோற்றத்தில் ரஜினி’.. வெளியானது அண்ணாத்த படத்தின் ‘சாரல் காற்றே’ பாடல்..

’இளமையான தோற்றத்தில் ரஜினி’.. வெளியானது அண்ணாத்த படத்தின் ‘சாரல் காற்றே’ பாடல்..

ரஜினி காந்த் - நயன்தாரா

ரஜினி காந்த் - நயன்தாரா

அண்ணாத்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகிவுள்ளது.

  • Share this:
    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். டி இமான் இசையமைத்துள்ளார். அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

    அண்ணாத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான’ அண்ணாத்த பேசுனா ஸ்டைலு பாடல் ஏற்கனவே வெளியான நிலையில்,தற்போது ’ சாரல் காற்றே’ என்ற மற்றொரு பாடலும் வெளியாகிவுள்ளது.இந்த பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளனர்.


    இந்த பாடலில் ரஜினிகாந்த பார்ப்பதற்கு மிகவும் இளமையாக தெரிகிறார். இந்த பாடல் கேட்பதற்கு ரொமாண்டிக்காக இருப்பதால் இளைஞர்களுக்கு பிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் படத்தில் ரஜினி மற்றும் நயன்தாரா காம்போ வரவேற்பை பெற்றதால், மீண்டும்  இருவரும் இணைந்து நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: