விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சியில் கரிப்பாளையம் கிராமத்தில் உள்ள எட்டியான் குளத்தில் கடந்த சில மூன்று நாட்களாக குடிமராமத்துப் பணி நடந்து வருகிறது. அப்போது பொக்லையன் ஓட்டுனர் குளத்தின் மையப் பகுதியில் மணல் எடுத்தபோது அங்கு 4 அடி உயரம் உள்ள கல்லாள் ஆன மகா விஷ்ணு சிலை இருந்துள்ளது.
இது குறித்து பொக்லைன் ஓட்டுனர் அப்பகுதி பொது மக்களிடம் கூறியுள்ளார். குளத்தில் மகா விஷ்ணு சிலை இருக்கும் தகவல் அப்பகுதியில் காட்டு தீயாக பரவியது.
இதனால் அங்கு சென்ற கரிப்பாளையம் பகுதி பொது மக்கள் குளத்தில் சிதலம் அடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சிலையை எடுத்துச்சென்று அங்கிருக்கும் கோயில் வளாகத்தில் வைத்து பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.
இது பற்றி தகவலறிந்த மரக்காணம் வட்டாட்சியர் ஞானம் சம்பவ இடத்திற்கு சென்று மகாவிஷ்ணு சிலையை பார்வையிட்டு அங்கிருந்த பொது மக்களிடம் விசாரனை நடத்தினார்.
கரிப்பாளையம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மகா விஷ்ணு சிலை சுமார் ஆயிரம் ஆண்டுக்கு மேல் பழமை வாய்ததாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.