ஹோம் /நியூஸ் /Breaking and Live Updates /

நடிகர்கள் மனசாட்சி இல்லாமல் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கிறார்கள்.. அன்புமணி ராமதாஸ்

நடிகர்கள் மனசாட்சி இல்லாமல் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கிறார்கள்.. அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் ரம்மி போன்றவற்றை தடை செய்ய அனுப்பப்பட்டது குறித்த கோப்புகளில்  உடனடியாகஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வன்னியர்களுக்கு 10.5 சதவீத  இட ஒதுக்கீடு வழங்கிய போது புள்ளி விவரங்கள் இல்லை எனக் கூறிய நிலையில் தற்போது எந்த அடிப்படையில் உயர்சாதி ஏழைகளுக்கு எப்படி 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளனர்.

  திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியில் திருவள்ளூர் மேற்கு மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ் வடகிழக்கு பருவ மழை உச்சத்தில் இருக்கிறது தயார் நிலையில் இருக்க வேண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை போதுமானதாக இல்லை என குற்றச்சாட்டினார்.

  காவிரி டெல்டா பகுதியில் மூழ்கியுள்ள பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு இட ஒதுக்கீடு 10% வழங்கியது தொடர்பாக உச்சநீதிமன்றம் கூறிய தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக கூறினார். பொருளாதாரம் கீழ் உள்ளவர்கள் என்றால் அனைத்து வகுப்பினர்களும் சேர்க்க வேண்டும் தங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய போது புள்ளி விவரங்கள் இல்லை எனக் கூறிய நிலையில், தற்போது எந்த அடிப்படையில் இட ஒதுக்கீடு 10% வழங்கி உள்ளனர் என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

  பாட்டாளி மக்கள் கட்சி 35 ஆண்டு காலமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் அதிமுக, திமுக அரசிடம் நல்ல செயல் திட்டங்களை கூறி அழுத்தம் கொடுத்தது வருவதாக தெரிவித்தார்.

  திமுக அதிமுக இல்லாமல் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என்றார்.

  இதையும் படிங்க: பழைய ஓய்வூதியத் திட்டம் தமிழகத்தில் நடைமுறையாவது எப்போது? - ராமதாஸ் கேள்வி

  பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே  வளர்ச்சியை வைத்து மக்களை இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், கல்வி, வேலை வாய்ப்பு, விவசாயம் ஆகியவற்றை முன்னிறுத்தி பாமக  செயல்படுகிறது  என கூறிய அன்புமணி, மக்கள் மற்ற கட்சிகளை புறக்கணிக்க வேண்டும் என்ற அவர் ஆளுநருக்கு  ஈகோ இருக்க கூடாது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் ஆளுநரை முதல்வர் சந்தித்து பிரச்சனையை சுமூகமாக பேசி தீர்க்க வேண்டும் என கூறினார்.

  தொடர்ந்து பேசிய அன்புமணி, ஆன்லைன் ரம்மி போன்றவற்றை தடை செய்ய அனுப்பப்பட்டது குறித்த கோப்புகளில்  உடனடியாக ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர்,  ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இதனால் பாதிக்கப்படுவதாகவும்  நடிகர்கள்  மனசாட்சி இன்றி ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிப்பதாக கண்டித்தார்.

  பரந்தூர் விமான நிலையம்அமைப்பதை திருப்போரூர் பகுதியில் அரசு இடத்தில் 5000 ஏக்கரில் அமைக்கலாம் என்றும் வளர்ச்சி வேண்டும் விவசாயம் சுற்று சூழல் பாதிப்பு இல்லாமல் விமான நிலையத்தை செயல்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுதியுள்ளார்.

  செய்தியாளர் : பார்த்தசாரதி (திருவள்ளூர்)

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Anbumani ramadoss, PMK, Vanniyar Reservation