• HOME
  • »
  • NEWS
  • »
  • live-updates
  • »
  • COVID-19: ஏன் இன்னும் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கவில்லை.? ஊசி போட்டு கொண்ட பின் மாஸ்க் அவசியமா

COVID-19: ஏன் இன்னும் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கவில்லை.? ஊசி போட்டு கொண்ட பின் மாஸ்க் அவசியமா

மாதிரி படம்

மாதிரி படம்

நாடு முழுவதும் தொற்று குறைந்துவிட்டதென்று நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் சில வாரங்களாக அண்டை மாநிலமான கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் தொற்று அதிகரித்து வருவது அனைவரையும் கவலை கொள்ள செய்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் துவங்கி விட்டதோ என்ற சந்தேகம் கடந்த சில நாட்களாக அனைவர் மனதிலும் எழுந்து வருகிறது. ஏனென்றால் மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிவேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்த மாநிலத்தின் முக்கிய நகரான நாக்பூரில் தொற்று பரவிய வேகத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த மணிலா அரசு 7 நாள் முழு ஊரடங்கிற்கு சமீபத்தில் உத்தரவிட்டது.

நாடு முழுவதும் தொற்று குறைந்துவிட்டதென்று நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் சில வாரங்களாக அண்டை மாநிலமான கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் தொற்று அதிகரித்து வருவது அனைவரையும் கவலை கொள்ள செய்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மராட்டிய மாநிலத்தில் மட்டும் தினசரி சுமார் 16,000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கை விரைவில் 20,000-த்தை நெருங்கும் என்று அம்மாநில அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதை தடுப்பதை இலக்காக கொண்டு அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றினாலும், அடுத்த சில நாட்களில் அந்த எண்ணிக்கை வந்துவிடுமோ என்று பீதி ஏற்பட்டுள்ளது.

இது இரண்டாவது அலை தானா.?

மராட்டியத்தின் சமீபத்திய பாதிப்புகளை உற்று நோக்கினால், இது கொரோனாவின் இரண்டாவது அலை என்றே தோன்றுகிறது. தற்போது தொற்றால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் அளவு மற்றும் வேகம் உண்மையில் முதல் அலையுடன் ஒத்து போகிறது. ஏனென்றால் கடந்த செப்டம்பரில் மகாராஷ்டிராவில் உச்சகட்டமாக ஒரு நாளில் 25,000 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. எனவே இது இரண்டாவது அலை இல்லை என்பதை மறுக்க முடியாது என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

முக்கிய வேறுபாடு

முன்னதாக பரவிய வைரஸ் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது மராட்டியத்தில் அதிகம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தாலும், இறப்பு விகிதம் குறைந்து கொண்டே தான் வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் இறப்பு விகிதம் 1 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. இது ஒரு நம்பிக்கையான அறிகுறியாக உள்ளது.

கட்டுப்படுத்துவதில் அலட்சியமா.?

தொற்றை கட்டுப்படுத்தும் பணிகளில் மாநில அரசு முறையாக ஈடுபட்டு வருவதாக கூறியுள்ள நிபுணர்கள், புவியியல், வானிலை முறை மற்றும் சர்வதேச இணைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தொற்று பாதிப்பு வெவ்வேறு இடங்களில் வேறுபடுகின்றன. இந்த காரணங்களில் மிகவும் சிக்கலான இடைவெளி உள்ளது. மேலும் இந்த அளவுகளை எப்போதும் கணிப்பது சாத்தியமில்லை என்று கூறியுள்ளனர்.

மீண்டும் லாக்டவுன் போடுவதால் தொற்று குறையுமா.?

இந்த கட்டத்தில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த லாக்டவுன் சரியான நடவடிக்கையாக இருக்காது. லாக்டவுன் என்பது அடைப்படையில் ஒரு பாஸ் பட்டன்(pause button) போன்றது. முதலாம் அலையின் போது போடப்பட்ட லாக்டவுன் என்பது, முதல் முதலாக ஏற்பட்ட திடீர் நெருக்கடியை சமாளிக்க நம்மை தயார்படுத்திக் கொள்ள அமல்படுத்தப்பட்டது. தொற்றின் துவக்க கட்டம் என்பதால் லாக்டவுன் தேவையான ஒரு முக்கிய நடவடிக்கையாக இருந்தது.

நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த, மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, ஆக்ஸிஜன் படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர்கள் போன்ற உபகரணங்களை தயார் செய்ய தேவையான அவகாசத்தை லாக்டவுன் வழங்கியது. தற்போது தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதால் லாக்டவுனை சிறிய அளவில் பயன்படுத்தலாமே தவிர, மீண்டும் முழு அளவில் அமல்படுத்தினால் மிகப் பெரிய சமூக மற்றும் பொருளாதார பக்க விளைவுகள் ஏற்பட்டு அவை வைரஸைக் காட்டிலும் பெரிய சிக்கல்களாக மாறும். கிளினிக்குகளில் காய்ச்சல் அறிகுறிகளோடு வருபவர்களை சோதித்தல், வீட்டில் தனிமையில் இருப்பவர்களைக் கண்காணித்தல், நேரடி தொடர்புகளை கண்டறிதல் என கண்காணிப்பை பலப்படுத்துவதே இந்த நேரத்தில் சரியான நடவடிக்கையாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

தடுப்பூசியின் பங்கு.?

ஆய்வின் படி பெரும்பாலான இடங்களில் 20-25% க்கும் அதிகமான மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர். இவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அடைந்திருப்பார்கள். இந்த நேரத்தில் தடுப்பூசி நிச்சயமாக இங்கே மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி அதன் பங்கை வகிக்க தொடங்கும் ஒரு கட்டத்தை விரைவாக அடைவோம்.

ஏன் இன்னும் அனைவருக்கும் தடுப்பூசி போடவில்லை.?

தடுப்பூசிகள் நல்ல முடிவுகளை தந்தாலும், நாம் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் குறுகிய கால தரவுகள் மட்டுமே நம்மிடம் உள்ளது. எனவே தடுப்பூசிகளை போட்டு கொள்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கண்காணிப்பது முக்கியம். ஊசி போட்டு கொள்பவர்களுக்கு ஏதேனும் பாதகமான விளைவுகள் ஏற்பட்டால் அதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்த காரணத்திற்காகவே எந்த ஒரு புதிய மருந்து அல்லது தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டாலும் அனைவருக்கும் உடனே வழங்கப்படுவதில்லை. பல கட்டங்களாக வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளனர் நிபுணர்கள்.

Also read... வந்தேவிட்டது கொரோனா அலை... வெளியே வராதீங்க..! எச்சரிக்கும் மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மா

தடுப்பூசி போட்டு கொண்டால் பயமின்றி இருக்கலாமா.?

எந்த தடுப்பூசியும் 100% நோய் எதிர்ப்பு திறன் பெற்றதில்லை. இதற்கு கொரோனா தடுப்பூசியும் விலக்கல்ல. எனவே ஒருவர் 2 டோஸ்களை போட்டு கொண்டாலும், அவருக்கும் கூட தொற்று நோய் பரவும் ஆபத்து உள்ளதை மறுக்க முடியாது. தடுப்பூசிகள் மூலம் பெறப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தொடர்ந்து ஒருவரை பின்பற்றினால் தான் தெரியும். எனவே தடுப்பூசி எடுத்த பின்னும் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி உள்ளிட்ட நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியம் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: