Tokyo Olympics | டோக்கியோ ஒலிம்பிக்கில், நீச்சல் போட்டிகள் நிறைவு.. 5 தங்கப் பதக்கங்களை வென்று அமெரிக்க வீரர் டிரஸ்ஸல் அசத்தல்..

அமெரிக்க வீரர் கேலப் டிரஸ்ஸல்

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவு நீச்சல் போட்டியில் அமெரிக்க வீரர் கேலப் டிரஸ்ஸல் தங்கப் பதக்கம் வென்றார்.

  • Share this:
    டோக்யோ ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. மொத்தம் 30 பிரிவுகளில் நடந்த நீச்சல் போட்டியில் அமெரிக்கா 8 தங்கம் மற்றும் தலா 9 வெள்ளி, வெண்கலம் என 26 பதக்கங்களை வென்றுள்ளது. அதிகபட்சமாக காலெப் டிரஸ்ஸல் 5 தங்கப் பதக்கங்களை வசப்படுத்தியுள்ளார். நடப்பு ஒலிம்பிக் தொடரில் அதிக பதக்கங்கள் வென்றவர்களுக்கான பட்டியலிலும் டிரஸ்ஸல் முதலிடத்தில் நீடிக்கிறார்.

    அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா 7 தங்கம் உட்பட 18 பதக்கங்களை வென்றுள்ளது. அந்நாட்டின் எம்மா மெக்கான் 4 தங்கம் மற்றும் 3 வெண்கலம் என பங்கேற்ற 7 போட்டிகளிலும் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவின் கேட் லெடிக்கி 2 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.

    மேலும் படிக்க... PV Sindhu | அரையிறுதியில் பி.வி சிந்து அதிர்ச்சித் தோல்வி.. வெண்கல பதக்க வாய்ப்பில் நீடிக்கிறார்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vaijayanthi S
    First published: