புதிய பயணத்தை தொடர்கிறேன்-வீடியோ வெளியிட்ட ஆலியா பட்

பாலிவுட் நடிகை ஆலிய பட்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆலியா பட் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 • Share this:
  பாலிவுட்டில் இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஆலியா பட். இவர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான மகேஷ் பட்டின் மகள். 2012 ஆம் ஆண்டு ஹிந்தி சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து 2 ஸ்டேட்ஸ், ஹைவே ஆகிய படங்களில் நடித்து பாராட்டுகளை பெற்றார்.

  ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் இருவரும் பிரபல பாலிவுட் காதல் ஜோடிகள் ஆவர். ரன்பீர் கபூர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்த கொரோனா ஊரடங்கு இல்லையென்றால் நானும், ஆலியா பட்டும் திருமணம் செய்துக்கொண்டிருப்போம் எனக் கூறியிருந்தார். எனவே இந்த ஆண்டு நிச்சயம் இவர்களின் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆலியா பட் தற்போது தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

  இந்நிலையில் புத்தாண்டை கொண்டாட சுற்றுலா சென்றுள்ள ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘ஹேப்பி நியூ ஜர்னி’ என்று குறிப்பிட்டு safe travels என்ற ஹேஸ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளார்.

      
  View this post on Instagram

   

  A post shared by Alia Bhatt ☀️ (@aliaabhatt)


   

  இவரின் இந்த வீடியோவிற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. மேலும் தற்போது ஆலியா பட் மூன்று படங்களில் பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்...
  Published by:Tamilmalar Natarajan
  First published: