துணை முதல்வர் பதவியிலிருந்து அஜித் பவார் ராஜினாமா! மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்

துணை முதல்வர் பதவியிலிருந்து அஜித் பவார் ராஜினாமா! மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்
அஜித் பவார்
  • News18
  • Last Updated: November 26, 2019, 2:40 PM IST
  • Share this:
மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியிலிருந்து அஜித் பவார் விலகினார். ராஜினாமா கடிதத்தை முதல்வர் தேவேந்திர பட்னவிஸிடம் வழங்கினார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் கூட்டணி அமைத்து உத்தவ் தாக்கரே தலைமையில் ஆட்சியமைப்பார்கள் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக சரத் பவாரின் அண்ணன் மகனும் தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவருமான அஜித் பவாரின் ஆதரவுடன் பா.ஜ.க ஆட்சியமைத்தது. மீண்டும் தேவேந்திர பட்னவிஸ் முதல்வரானார். அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.

அது மகாராஷ்டிரா அரசியல் களத்தில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை எதிர்த்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாளை மாலை 5 மணிக்குள் தேவேந்திர பட்னவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் உத்தரவிட்டது. அதனையடுத்து, பா.ஜ.க ஆட்சிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. முன்னதாக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் 162 எம்.எல்.ஏக்கள் ஒன்று திரண்டு அவர்களுடைய பலத்தை ஊடகங்கள் முன் காட்டிவிட்டனர்.


இந்தநிலையில், துணை முதல்வராக பொறுப்பேற்றிருந்த அஜித் பவார் ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை முதல்வர் தேவேந்திர பட்னவிஸிடம் அளித்துள்ளார். அது மகாராஷ்டிரா அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also see:

 
First published: November 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்