டிரைவர் ஜமுனா - புதிய பயணத்தை தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்

டிரைவர் ஜமுனா படபூஜை

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் நாயகி மையத் திரைப்படமான டிரைவர் ஜமுனா இன்று பூஜையுடன் தொடங்கியது.

  • Share this:
நடிகர்களைப் போலவே நடிகைகளும் முக்கியத்துவம் பெறும் காலகட்டம் இது. முன்பு விஜயசாந்தி போன்று ஓரிருவர் மட்டுமே நாயகி மையப் படங்களில் நடிக்க வைக்கப்பட்டனர். இப்போது காலம் மாற காட்சிகளும் மாறியுள்ளன. நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா, கீர்த்தி சுரேஷ், தமன்னா, காஜல் அகர்வால்... என அரை டஜனுக்கும் மேல் முன்னணி நடிகைகள் தொடர்ச்சியாக நாயகி மையப் படங்களில் நடிக்கின்றனர்.

வரலட்சுமி, ஆன்ட்ரியா, ராய் லட்சுமி போன்ற இரண்டாம்கட்ட நாயகிகளும் நாயகி மைப்படங்களில் நடிப்பதுதான் விசேஷம். அதில் முக்கியமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

கானா என்ற நாயகி மையப்படத்தைத் தொடர்ந்து க/பெ ரணசிங்கம் படத்திலும் தனது நடிப்பால் மிரட்டினார். மலையாளத்தில் வெளியான தி கிரேட் இன்டியன் கிச்சன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நிமிஷா நடித்த வேடத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் செய்கிறார். இதுவும் நாயகி மையப் படமே.

அத்துடன் டிரைவர் ஜமுனா என்ற படத்திலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 18 ரீல்ஸ் எஸ்பி.சௌத்ரி தயாரிக்கும் இந்தப் படத்தை, வத்திக்குச்சி படத்தை இயக்கிய கின்சிலின் இயக்குகிறார். ஜிப்ரான் இசை. இன்று டிரைவர் ஜமுனாவின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
Published by:Sheik Hanifah
First published: