Home /News /live-updates /

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நிறைவு.. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நிறைவு.. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

அதிமுக வழக்கு

அதிமுக வழக்கு

வழக்கு விசாரணையின்போது, பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஈபிஎஸ்-க்கு ஆதரவாக உள்ளனரா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை,  உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இரண்டாவது நாளாக விசாரித்தார்.
    அப்போது, 15 நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றால்,  ஜூன் 23ம் தேதியே பொதுக்குழு குறித்து அறிவிக்கப்பட்டுவிட்டது எனவும்,
    ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் காலாவதியானதால், தலைமைக்கழக நிர்வாகிகள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் ஈபிஎஸ் தரப்பு தெரிவித்தது.

    ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருக்கும்போது, ஒரு ஆண்டுக்கும் முன்னரே எப்படி பதவிகள் காலாவதியானது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.<ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் நடைமுறைகளுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் பதவிகள் காலாவதியாகிவிட்டதாகவும், 2017ம் ஆண்டு நியமனத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ள முடியாது என்றும் ஈபிஎஸ் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இரண்டாயிரத்து 432 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக, கடிதம் வழங்கியுள்ளதாகவும் ஈபிஎஸ் தரப்பு வாதிட்டது.

    ஜூன் 23ம் தேதி ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்காவிட்டால், பதவிகள் காலாவதியாகிவிடும் என எந்த தீர்மானத்திலும் இல்லை என ஓபிஎஸ் தரப்பு வாதிட்டது. பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஈபிஎஸ்-க்கு ஆதரவாக உள்ளனரா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    இதையும் படிங்க: பொதுச்செயலாளர் பதவி ஏன்? நீதிபதியின் கேள்விகளால் இ.பி.எஸ்ஸுக்கு சட்ட ரீதியில் பின்னடைவா?

    ஆனால், பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவை தொண்டர்களின் விருப்பமாக கருத முடியாது என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழ்மகன் உசேனை நிரந்தர அவைத்தலைவராக முன்மொழியும் போது, ஈபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர் என்று தான் குறிப்பிடப்பட்டதாகவும், இதிலிருந்தே பதவிகள் காலாவதியாகவில்லை என்பது உறுதியாவதாகவும் ஓபிஎஸ் தரப்பு வாதிட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் , தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: AIADMK, Chennai High court, OPS - EPS

    அடுத்த செய்தி